மீண்டும் தெலுங்கு செல்லும் அமலா பால்

‘வேலை­யில்லா பட்­ட­தாரி- 2’ படத்தை அடுத்து திருட்­டுப்­ப­யலே-2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்­சஷன், சண்­டக்­கோழி-2 என பல படங்­களில் நடிக்­கிறார் அம­லாபால்.

 

இதில் சுசி­க­ணேசன் இயக்­கத்தில் அவர் நடித்துள்ள திருட்­டுப்­ப­யலே-2 படம் நவம்பர் 30 ஆம் திகதி தமிழ், தெலுங்கில் வெளி­யா­கி­றது. இதில் தெலுங்கு பதிப்­பிற்கு டாங்­கோ­டோச்­சடு என்று பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.

இதற்கு முன்பு தெலுங்கில் லவ் பெயி­லியர், நாயக், ஜன்­டாபாய் கபி­ராஜு என பல படங்­களில் நடித்­துள்ள அம­லாபால், அதன்­பி­றகு எந்த தெலுங்கு படத்­திலும் நடிக்­க­வில்லை.

 

ஆக சில வருட இடை­வெ­ளிக்குப் பிறகு தமிழ் டப்பிங் படம் மூலம் மீண்டும் தெலுங்­கிற்கு செல்­கிறார் அம­லாபால்.

 

அதோடு, தற்­போது தமிழ், மலை­யாளம், கன்­னடம் என மூன்று மொழி­க­ளிலும் நடித்து வரும் அம­லாபால், இந்த சூட்­டோடு நேரடி தெலுங்கு படங்­களை கைப்­பற்றி விட வேண்டும் என்று சில கதை­களை கேட்டு வரு­கிறார்.

 

திருட்­டுப்­ப­யலே-2 திரைக்கு வந்த பிறகு அந்த படம் குறித்த தகவலை வெளியிடப்போகிறாராம் அமலாபால்.

(Visited 70 times, 1 visits today)

Post Author: metro