வலகம்பா மன்னனின் காலத்துக்குரிய 300 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக் கல்: தேசிய இரத்தினக்கல் மற்றும் நகை அதிகார சபையினரிடம் ஒப்படைக்க உத்தரவு

(மதுரங்குளி நிருபர்)

நவ­கத்­தே­கம வன்­னி­யா­கம பாது­காப்பு வனத்தில் புதையல் ஒன்றின் மூலம் பெறப்­பட்ட 300 கிராம் எடை­கொண்ட நீல இரத்­தினக்கல் ஒன்றைக் கைப்­பற்­றிய நவ­கத்­தே­கம பொலிஸார், அதனை ஆன­மடு நீதி­மன்­றத்தில் சமர்ப்­பித்தபோது அதன் விலையை மதிப்­பீடு செய்­வ­தற்­காக தேசிய இரத்­தி­னக்கல் மற்றும் நகை அதி­கார சபை­யி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கு­மாறு ஆன­மடு நீதி­மன்ற பதில் நீதிவான் சுனில் ஜய­வர்த்­தன கடந்த வியா­ழக்­கி­ழமை உத்­த­ர­விட்­டுள்ளார்.

நவ­கத்­தே­கம 17 ஆம் கட்டை வீதியில் வன்­னி­யா­கம அரச பாது­காப்பு வனாந்­த­ரத்தின் பிர­தான வீதி­யி­லி­ருந்து சுமார் ஆறு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மொர­க­ஹ­வெவ பகு­தியில், கற்­பாறை ஒன்றின் நீர் தேங்­கி­யி­ருந்த சிறிய குழி­யி­லி­ருந்த புதை­யலை உடைத்து அங்­கி­ருந்த இந்த நீல இரத்­தினக் கல்லை எடுக்கும்போதே அங்கு காத்­தி­ருந்த நவ­கத்­தே­கம பொலிஸ் நிலை­யத்தின் பொலிஸ் குழு­வினர் பிர­தான சந்­தேக நப­ரான மாத்­தறை பிர­தே­சத்தைச் சேர்ந்த 34 வய­து­டைய பூசகர் ஒரு­வ­ருடன் நவ­கத்­தே­கம பிர­தே­சத்தைச் சேர்ந்த மற்­றொ­ரு­வ­ரையும் கைது செய்­துள்­ளனர்.

பொலி­ஸா­ருக்கு கிடைத்த தகவல் ஒன்றைத் தொடர்ந்து நவ­கத்­தே­கம பொலிஸ் நிலை­யத்தைச் சேர்ந்த பொலிஸ் குழு ஒன்று குறித்த பிர­தே­சத்­துக்கு ஏற்­க­னவே சென்று அங்கு புதையல் தோண்­டு­வ­தற்­காக சந்­தேக நபர்கள் வரும் வரையில் காத்­தி­ருந்­தனர்.

சந்­தேக நபர்கள் அங்கு வந்து புதையலைத் தோண்டிக் குறித்த நீல மாணிக்க கல்லை எடுத்­ததன் பின்னர் அவர்­களை பொலிஸார் கைது செய்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

குறித்த மாணிக்­ககல் சுமார் 300 கோடிக்கும் அதிக பெறு­ம­தி­யா­னது எனவும், அது வல­கம்பா அர­சரின் காலத்தில் இங்கு வைக்­கப்­பட்­டது என்றும் இதன் போது கைது செய்­யப்­பட்ட பூசகர் பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்ளார்.

இந்த இரத்­தினக்கல் பொலி­ஸாரால் கைப்­பற்­றப்­பட்ட பின்னர் புத்­தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சம்­பிக்க சிறி­வர்­தன மற்றும் புத்­தளம் பிரிவின் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஜே. ஏ. சந்­தி­ர­சேன ஆகி­யோ­ருக்கு இது பற்றி அறி­விக்­கப்­பட்­ட­த­னை­ய­டுத்து நவ­கத்­தே­கம பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நவீன் இந்­தி­ரஜித் தயா­னந்­த­வினால் இந்த நீல மாணிக்­ககல் ஆன­மடு நீதி­மன்­றத்தில் கைய­ளிக்­க­பட்டபோதே அதன் விலையை மதிப்­பி­டு­வ­தற்கு தேசிய இரத்­தி­னக்கல் மற்றும் நகை அதி­கார சபைக்கு ஆன­மடு பதில் நீதவான் உத்­த­ர­விட்டார்.

புதையல் தோண்­டு­வ­தற்­காக குறித்த பூசகர் குறு­கிய நேரத்­தையே எடுத்­த­தா­கவும், இரத்­தி­னக்கல் எடுக்­கப்­பட்ட போது பாரிய வெளிச்சம் ஒன்று அந்த குழி­யி­லி­ருந்து பரவிச் சென்­ற­தா­கவும், அந்தக் கல்லை எடுக்கும்போது பெரும் மழை பெய்­த­தா­கவும் இந்த முற்­று­கையில் கலந்து கொண்ட பொலிஸார் தெரி­வித்­தனர்.

உப பொலிஸ் பரி­சோ­தகர் பீ. எம். எல். பத்திரன, பொலிஸ் சார்ஜன்ட் தர்மசிறி (41440), பொலிஸ் கான்ஸ்டபிள் களான குமாரகே (18247), முதியான்சே (63079, கெலும் (71231), ராஜகருணா (31260) ராஜகருணா (55080), நிதர் ஷன் (37593) ஆகி யோர் இந்த நட வடிக்கையில் ஈடுபட்டி ருந்தனர்.

 

(Visited 238 times, 1 visits today)

Post Author: metro