விடு­தலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிர­பாக­ர­­னுக்கு நிக­ராக அனை­வ­ராலும் பேசப்­படும் தலை­வ­ராக இரா.சம்­பந்தன் திகழ்­கிறார் – மகளிர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன்

(மயூரன்)

விடு­தலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிர­பா­கர­­னுக்கு நிக­ராக அனை­வ­ராலும் பேசப்­படும் தலை­வ­ராக இரா.சம்­பந்தன் திகழ்­கின்றார்.

அவ­ருடன் இணைந்து 2020 ஆம் ஆண்­டுக்குள் தீர்வைப் பெறு­வ­தற்கு தமிழ் மக்கள் ஒன்­றி­ணைய வேண்டும் என மகளிர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெர­வித்­துள்ளார்.

யாழில் உள்ள அவ­ரது இல்­லத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

மேலும் தெரி­விக்­கையில், வடக்கு கிழக்கில் தமி­ழீழம் கோரி எமது இளை­ஞர்கள் ஆயுதப் போராட்­டத்தை முன்­னெ­டுத்து அந்தப் போராட்டம் தோற்­க­டிப்­பட்ட இந்த சந்­தர்ப்­பத்தில் தமி­ழீழ விடு­த­லைப்­ பு­லிகள் இயக்­கத்தின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­கரன் உயி­ருடன் இருக்­கின்­றாரா இல்­லையா என்ற நிலை உரு­வா­கி­யுள்­ளது.

போர் முடி­வுற்­ற­தாக கூறிக்­கொண்­டுள்ள கடந்த கால அர­சாங்கம் பிர­பா­கரன் உயி­ருடன் இருக்­கின்­றாரா என்­ப­தனை உறு­திப்­ப­டுத்த வேண்டும்.

அவர் இறந்­து­விட்டார் என்­ப­தற்­கு­ரிய மரணச் சான்­றி­தழை வழங்கும் பட்­சத்தில் பிர­பா­கரன் இறந்­து­விட்டார் என்­ப­தனை நாமும் உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ள முடியும்.

யுத்தம் நிறை­வ­டைந்த நிலையில் இன்று எமது தலை­வ­ராக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனே எமது நாட்­டிலும் புலம்­பெயர் நாட்­டிலும் உள்ள மக்­க­ளுக்­காக எமது தலை­வ­ராக உரு­வா­கி­யுள்ளார்.

தமிழ் மக்­களின் தனித் தீர்­விற்­காக அர­சாங்­கத்­துடன் விட்­டுக்­கொ­டுத்து வரு­கின்றார். இனியொரு தலைவரை இங்கு எதிர்பார்க்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாகவே எமது தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

(Visited 16 times, 1 visits today)

Post Author: metro