விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாரகனுக்கு நிகராக  அனைவராலும் பேசப்படும் தலைவராக இரா.சம்பந்தன் திகழ்கிறார்: இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்

(மயூரன்)

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாரகனுக்கு நிகராக அனைவராலும் பேசப்படும் தலைவராக இரா.சம்பந்தன் திகழ்கின்றார். அவருடன் இணைந்து  2020 ஆம் ஆண்டுக்குள் தீர்வைப் பெறுவதற்கு தமிழ் மக்கள் ஒன்றிணைய வேண்டும் என மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரவித்துள்ளார்.

யாழில்உ ள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு அவர்  தெரிவித்தார்.

 அவர்  மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கில் தமிழீழம் கோரி எமது இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து அந்தப் போராட்டம் தோற்கடிப்பட்ட இந்த சந்தர்ப்பத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்ற நிலை உருவாகியுள்ளது.

போர் முடிவுற்றதாக கூறிக்கொண்டுள்ள கடந்த கால அரசாங்கம் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா என்பதனை உறுதிப்படுத்த வேண்டும். அவர் இறந்துவிட்டார் என்பதற்குரிய மரணச் சான்றிதழை வழங்கும் பட்சத்தில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதனை நாமும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

யுத்தம் நிறைவடைந்த நிலையில்  இன்று எமது தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே  எமது நாட்டிலும்  புலம்பெயர் நாட்டிலும் உள்ள மக்களுக்காக எமது தலைவராக உருவாகியுள்ளார்.

தமிழ் மக்களின் தனித் தீர்விற்காக அரசாங்கத்துடன் விட்டுக்கொடுத்து வருகின்றார். இனியொரு தலைவரை இங்கு எதிர்பார்க்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாகவே எமது தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

 

(Visited 31 times, 1 visits today)

Post Author: metro