தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ளலாம் என்று கூறி காதலியை உயிருடன் எரித்துக்கொலை செய்த காதலன் கைது!

‘தீக்­கு­ளித்து தற்­கொலை செய்து கொள்­ளலாம்’ என்று கூறி காதலியை எரித்­துக்­கொலை செய்த காதலன், கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

கோவை மாவட்டம் நெகமம் அருகே செஞ்­சே­ரிப்­பு­தூரை சேர்ந்­தவர் கமலா (வயது 75). இவ­ரு­டைய பேத்தி ஜான்­சி­பி­ரியா (17). இவ­ருக்கு தாய், தந்தை இல்லை. இதனால் பாட்டியான கம­லாவின் வீட்­டி­லேயே தங்கி அங்­குள்ள ஒரு பாடசாலையில் பிளஸ்-2 படித்து வந்தார்.

அதே ஊரை சேர்ந்த சுப்­பி­ர­ம­ணி­யத்தின் மகன் செல்­வ­குமார் (22). விசைத்­தறி தொழி­லாளி. செல்­வ­கு­மாரும், ஜான்­சி­பி­ரி­யாவும் கடந்த 4 ஆண்­டு­க­ளாக காத­லித்து வந்­தனர். இரு­வரும் வெவ்­வேறு இனத்தைச் சேர்ந்­த­வர்கள்.

இவர்­க­ளு­டைய காதல் விவ­காரம் தெரிந்த கமலா இரு­வ­ரையும் கண்­டித்­த­தாக தெரி­கி­றது. தனது பாட்­டிக்கு காதல் விடயம் தெரிந்து விட்­டதால் வாழ்க்­கையில் எப்­படி ஒன்று சேர போகிறோம் என்று ஜான்­சி­பி­ரியா காதலன் செல்­வ­கு­மா­ரிடம் தெரி­வித்துள்ளார்.

மேலும் செல்­வ­கு­மாரின் குடும்­பத்­தி­னரும் இந்த காத­லுக்கு எதிர்ப்பு தெரி­வித்து வந்­தனர்.
இந்த நிலையில் கமலா அருகே உள்ள ஆல­யத்­துக்கு பிரார்த்­தனை செய்ய சென்று விட்டார்.

வீட்டில் ஜான்­சி­ பி­ரியா மட்டும் தனி­யாக இருந்தார். அப்­போது அங்கு வந்த காதலன் செல்­வ­குமார், நாம் தற்­கொலை செய்­து­கொள்வோம் என்று வீட்டில் தூக்கு கயிற்றை கட்­டினார். அவ­ரிடம், தூக்­குப்­போட்டால் கழுத்து இறுகி செத்து விடு­வது பய­மாக இருக்­கி­றது என்று ஜான்­சி­பி­ரியா கூறியிருக்­கிறார்.

இதை­தொ­டர்ந்து மண்­ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து இரு­வரும் தற்­கொலை செய்து கொள்­ளலாம் என்று செல்­வ­குமார் கூறியுள்ளார். முதலில் மண்­ணெண்­ணெயை ஊற்றி ஜான்­சி­பி­ரியா மீது தீவைப்­பது என்றும், எரியும் தீயில் இரு­வரும் கட்­டிப்­பி­டித்துக் கொள்­ளலாம் எனவும் செல்­வ­குமார் கூறி­யுள்ளார். இதை ஜான்­சி­பி­ரியா ஏற்­றுக்­கொண்டார்.

இதைத்­தொ­டர்ந்து ஜான்­சி ­பி­ரியா மீது செல்­வ­குமார் மண்­ணெண்­ணெயை ஊற்­றினார். பின்னர் தீக்­குச்­சியை பற்ற வைத்து அவர் மீது வீசினார். இதில் கண் இமைக்கும் நேரத்தில் ஜான்­சி­பி­ரி­யாவின் உடலில் தீப்­பற்றி பரவி எரிந்­தது. இதனால் வலியால் அல­றித்­து­டித்­த­படி அவர், காத­லனை நோக்கி ஓடி­வந்தார். அதைப்­பார்த்து பத­றிப்­போன செல்­வ­குமார் அங்­கி­ருந்து தப்­பி­யோடி விட்டார்.

இதற்­கி­டையே தீ உடலில் பற்­றி­யதால் அங்கும், இங்கும் ஓடி ஜான்­சி­பி­ரியா அல­றினார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்­கம்­பக்­கத்­தினர் விரைந்­து­வந்து தீயை அணைத்­தனர். பின்னர் அவரை மீட்டு அம்­பியூ லன்ஸ் மூலம் கோவை அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்­தனர்.

அங்கு, அவ­சர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­தித்து டாக்­டர்கள் சிகிச்சை அளித்­தனர். இருப்­பினும் சிகிச்சை பல­னின்றி அவர் நேற்று முன்தினம் மாலை இறந்துவிட்டார்.

காத­லியை உயி­ருடன் எரித்­துக்­கொன்ற செல்­வ­கு­மாரை பிடிக்க நெகமம் பொலிஸார் பல இடங்­களில் அவரை தேடி­னார்கள். இந்த நிலையில், சுல்­தான்­பேட்டை அருகே இடை­யர்­பா­ளையம் என்ற இடத்தில் பதுங்கியிருந்த செல்வகுமாரை இரவில் பொலிஸார் கைது செய்தனர். தற்போது அவரை பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

(Visited 42 times, 1 visits today)

Post Author: metro