உயர்தரத்துக்கான புதிய தொழில் துறை பாட ஆசிரியர்களாக பட்டதாரிகளை இணைப்பதற்கான விண்ணப்பம் கோரல்!

(எஸ்.கே.)
உயர்­த­ரத்­துக்­கான புதிய தொழில் விட­யங்­களைப் போதிப்­ப­தற்­காக 2100 பட்­ட­தா­ரி­களை ஆசி­ரியர் சேவையில் இணைத்துக் கொள்­வ­தற்­கான வர்த்­த­மானி அறி­வித்தல் கடந்த 10 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இதன்­படி தேசிய மற்றும் மாகாண பாட­சா­லை­களில் புதிய உயர்­தர தொழில் துறை தொடர்­பான பாடங்­களை போதிக்க நிலவும் வெற்­றி­டங்­க­ளுக்­காக தமிழ் சிங்­கள ஆசி­ரி­யர்கள், ஆசி­ரிய சேவையில் 3– 1 (அ) தரத்­துக்கு பட்­ட­தா­ரிகள் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர்.

இதன்­படி 11– 12– 2017ஆம் திகதிக்கு முன்னர் பல்­க­லைக்­க­ழ­கங்கள் அல்­லது ஒன்­றி­ணைக்­கப்­பட்ட பல்­க­லைக்­க­ழ­கங்­களில் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

(Visited 20 times, 1 visits today)

Post Author: metro