தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்து இயங்கவோ சின்னத்தில் போட்டியிடவோ முடியாது என ஈ.பி.ஆர்.எல்.எவ். அறிவிப்பு

(மயூரன்)

புதிய அர­சியல் யாப்பு தொடர்பில் தமி­ழ­ரசுக் கட்­சியின் தீர்­மா­ன­மா­னது, தமிழ் மக்­களின் ஆணையை மீறிய செய­லாகும். இதனால் இனியும் அவர்­க­ளுடன் இணைந்து செயற்­பட முடி­யாது. அவர்கள் சின்­னத்தில் தேர்­தலில் போட்­டி­யி­டவும் முடி­யாது என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்­சியின் தலைவர் சுரேஷ் பிரே­ம­சந்­திரன் தெரி­வித்­துள்ளார்.

யாழ்.பொது நூல­கத்தில் ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற தமிழ் மக்கள் பேர­வையின் கூட்டம் நிறை­வ­டைந்த பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும் போதே அவ்­வாறு தெரி­வித்தார்.

மேலும் தெரி­விக்­கையில், தமி­ழ­ரசுக் கட்சி மக்­களின் ஆணையை முழு­மை­யாக உதா­சீனம் செய்­து­விட்­டது. அதனால் புதிய முன்­ன­ணியின் அவ­சி­யத்தை ஈ.பி.ஆர்.எல்.எவ் கடந்த சில வரு­டங்­க­ளாக வலி­யு­றுத்தி வரு­கின்­றது. அதனை இன்று அனை­வரும் புரிந்து கொண்­டுள்­ளனர்.

தமி­ழ­ரசு கட்சி, வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி போன்ற விட­யத்­தையே கைவிட்டு விட்­டது. அதனால் தமிழ் மக்­களின் உரி­மை­களை வென்­றெ­டுக்க புதிய முன்­ன­ணியும் புதிய தலை­மையும் தேவை எனும் விடயம் இன்று அனை­வ­ராலும் உணர்ந்து கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இந்தக் கூட்­டத்தில் வந்த அனை­வரும் அதனை ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். தமி­ழ­ரசுக் கட்சி இன்று, நேற்று அல்ல நீண்ட கால­மாக எதேச்­சை­யுடன் அனைத்து விட­யங்­க­ளிலும் தீர்­மா­னங்­களை எடுக்­கின்­றது.

கூட்­ட­மைப்­புடன் இணைந்து முடி­வெ­டுப்­ப­தில்லை. ஒரு சிலரே முடிவு எடுத்து விட்டு அதனை மற்­ற­வர்­க­ளுக்கு திணிக்­கின்­றார்கள். இந்த நிலையில் தமிழ் மக்கள் உரி­மை­களை வென்று எடுக்க புதிய கூட்­டணி உரு­வாக உள்­ளது. அது பொதுச் சின்­னத்­துடன் பொதுப் பெய­ருடன் காலத்தின் தேவைக்­காக உரு­வாகும்.

ஈ.பி.ஆர்.எல்.எவ். இனியும் சேர்த்து தமி­ழ­ரசு கட்­சி­யுடன் இயங்க முடி­யாது. ஏனெனில் தமி­ழசுக் கட்சி இடைக்­கால அறிக்கை, அரசியல் சாசனம் தொடர்பில் அவர்கள் எடுத்த முடிவு தமிழ் மக்கள் ஆணைக்கு எதிரானது. அதனாலேயே அவர்களுடன் சேர்ந்து இயங்க முடியாது என்றார்.

(Visited 21 times, 1 visits today)

Post Author: metro