சமுத்திரகனிக்கு ஜோடியாகும் ரம்யா

மணிமாறன் இயக்கத்தில் சமுத்திரகனி நடிக்கும் `சங்க தலைவன்’ படத்தில் டி.வி.தொகுப்பாளினி ரம்யா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இயக்குநர் என்ற ஒரு முகம் இருந்தாலும், நடிக்க அதிகளவில் வாய்ப்புகள் வருவதால் சமுத்திரகனி தற்போது முழு நேர நடிகராகவே மாறியிருக்கிறார் என்று தான் கூற வேண்டும். அவர் தற்போது ‘கொளஞ்சி’, ‘ஆண் தேவதை’, ‘ஏமாலி’, ‘காலா’, ‘மதுரை வீரன்’ படங்களில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக மணிமாறன் இயக்கத்தில் ‘சங்க தலைவன்’ என்ற படத்தில் நடிக்கிறார். வெற்றி மாறன் தயாரிக்கும் இந்த படத்தில் சமுத்திரகனி ஜோடியாக டி.வி.தொகுப்பாளினியான ஒப்பந்தமாகியிருக்கிறார். சமுத்திரகனியின் மனைவி கதாபாத்திரத்தில் ரம்யா நடிப்பதாக கூறப்படுகிறது.

ரம்யா ஏற்கனவே ‘ஓ காதல் கண்மணி’, ‘வனமகன்’ உள்ளிட்ட படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  கைத்தறி தொழிலை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் கைத்தறி தொழிலாளராகவே சமுத்திரகனி நடிக்கிறார்.

கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் ஆரம்பமாகவிருப்பதாக கூறப்படுகிறது.

(Visited 59 times, 1 visits today)

Post Author: metro