குவைத்தில் இன்னல்களுக்குள்ளான 27 பெண்கள் நேற்று நாடு திரும்பினர்

(ரெ.கிறிஷ்­ணகாந்)

குவைத் நாட்­டுக்கு தொழி­லுக்­காக சென்று பல்­வேறு இன்­னல்­க­ளுக்­குள்­ளான 27 பெண்கள் நேற்­றுக்­காலை நாடு திரும்­பி­ய­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

சுற்­றுலா வீசாவில் சென்று தொழிலில் ஈடு­பட்­டமை, தொழில் ஒப்­பந்தம் நிறை­வ­டைந்த நிலையில் பணி­யாற்­றி­யமை மற்றும் பணி­யி­டத்தில் ஏற்­பட்ட பல்­வேறு இன்­னல்கள் என்­பன கார­ண­மாக இவர்கள் மீண்டும் இலங்­கைக்கு அழைத்­து­வ­ரப்­பட்­ட­தாக அவ்­வ­மைச்சு தெரி­வித்­துள்­ளது.

சட்டம் மற்றும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் சட்­டத்­த­ரணி தலதா அத்­து­கோ­ர­ளவின் முயற்­சியில் இவர்கள் இவ்­வாறு மீண்டும் இலங்­கைக்கு அழைத்­து­வ­ரப்­பட்­டுள்­ளனர்.

 

தற்­போது குவைத் அர­சினால் நிர்­வ­கிக்­கப்­பட்­டு­வரும் நலன்­புரி நிலை­யங்­களில் தற்­போது இலங்­கை­யர்கள் எவரும் இல்­லை­யென வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

அத்­துடன் குவைத்தின் இலங்கை தூத­ர­கத்தில் அமைக்­கப்­பட்­டுள்ள பாது­காப்பு இல்­லங்­களில் மேலும் 85 இலங்கை பெண்கள் காணப்­ப­டு­வ­தா­கவும், அவர்­க­ளையும் விரைவில் நாட்­டுக்கு அழைத்து வரு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கு­மாறு அமைச்சர், குவைத் தூத­ரக அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­விட்­டுள்ளார்.

சட்­ட­ரீ­தி­யான பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுத்­துள்ள இலங்கைப் பணி­யா­ளர்­களை இவ்­வ­ருட நிறை­வுக்குள் கொண்­டு­வ­ரு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவும் அமைச்சர் மேலும் தெரி­வித்தார்.

இதே­வேளை, கடந்த 2016 ஆம் ஆண்டில் பல்­வேறு இன்­னல்­க­ளுக்கு முகங்­கொ­டுத்த 1,324 பணி­யா­ளர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாகவும், அதற்காக 17, 392 குவைத் தினார்களை செலவிட்டதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் சட்டத்தரணி தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

(Visited 66 times, 1 visits today)

Post Author: metro