மும்பை நோக்கி பயணித்த விமானம் தொழில்நுட்ப கோளாறினால் கட்டுநாயக்கவில் தரையிறங்கியது!

(ரெ.கிறிஷ்­ணகாந்)

இந்­தி­யாவின் மும்பை விமான நிலை­யத்தை நோக்கிப் பய­ணித்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்­த­மான விமா­ன­மொன்று திடீ­ரென ஏற்­பட்ட தொழில்­நுட்பக் கோளாறு கார­ண­மாக நேற்­று­முன்­தினம் இரவு அவ­ச­ர­மாக மீண்டும் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் தரை­யி­றக்­கப்­பட்­ட­தாக விமான நிலைய தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

கட்­டு­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்­தி­லி­ருந்து நேற்று முன்­தினம் இரவு 11.47 மணி­ய­ளவில் மும்பை நோக்கி புறப்­பட்டுச் சென்ற யூ. எல். 141 என்னும் ஏ 320 எயார் பஸ் ரகத்தைச் சேர்ந்த இந்த விமா­ன­மா­னது பய­ணத்தை ஆரம்­பித்து 2 மணித்­தி­யா­லங்­களின் பின்னர் திடீ­ரென ஏற்­பட்ட தொழில்­நுட்ப கோளாறு கார­ண­மாக மீண்டும் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் தரை­யி­றக்­கப்­பட்­டுள்­ளது.

அதன்­போது அவ்­வி­மா­னத்தில் 138 பய­ணிகள் இருந்­த­தா­கவும் பின்னர் அவர்கள் வேறு விமா­ன­மொன்­றி­னூ­டாக மும்பை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

(Visited 29 times, 1 visits today)

Post Author: metro