ஹொரணை வீடு ஒன்றிலிருந்து இளைஞர், யுவதியின் சடலங்கள் மீட்பு

(ரெ.கிறிஷ்­ணகாந்)

ஹொரணை மில்­ல­னி­ய­வத்த பர­கஸ்­தொட பிர­தே­சத்­தி­லுள்ள வீடு ஒன்­றினுள் இளை­ஞ­ரொ­ரு­வரும் யுவ­தி­யொ­ரு­வரும் நேற்­று­முன்­தினம் தூக்­கிட்டு தற்­கொலை செய்­து­கொண்­டுள்­ள­தாக மில்­ல­னிய பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

மில்­ல­னி­ய­வத்த பர­கஸ்­தொட பிர­தே­சத்தைச் சேர்ந்த கோச­ல­சவின் பொன்­சேகா(28) என்ற இளை­ஞனும் கஸ்­தூரி ஆரச்­சிகே கோசலி மஹே­ஷிகா(19) என்ற யுவ­திமே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ள­தாக விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ளது.

இந்­நி­லையில், இரு­வ­ரது மரண விசா­ர­ணைகள் இடம்­பெ­ற­வுள்ள அதே­வேளை, மில்­ல­னிய பொலிஸார் மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­வ­தாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

(Visited 35 times, 1 visits today)

Post Author: metro