காதலன் முன்னிலையில் கடத்தப்பட்ட காதலி; 5 இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வு!

(எம். செல்­வ­ராஜா, எஸ்.கே)

மேல­திக வகுப்­புக்குச்  சென்று விட்டு திரும்பிக் கொண்­டி­ருந்த மாணவி 5 இளை­ஞர்­களால் கூட்டுப் பாலியல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டுள்ளார்.

இந்தச் சம்­பவம் மஹி­யங்­க­னையை அண்­மித்த பிர­தே­சத்தில் நேற்று முன்­தினம் மாலை இடம்­பெற்­றுள்­ளது.

இது தொடர்பில் 5 இளை­ஞர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­து டன் பாதிக்­கப்­பட்ட மாணவி மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

சம்­பவம் தொடர்பில் கைது­செய்­யப்­பட்­டுள்ள ஐந்து இளை­ஞர்­களும் 17, 19, 22, 24, 25 வய­து­களை உடை­ய­வர்கள் என பொலிஸார் தெரி­வித்­தனர்.

தனது காத­ல­னுடன் 16 வய­தான குறித்த  மாணவி,மேல­திக வகுப்­புக்குச்  சென்றுவிட்டு  வீடு திரும்பிக் கொண்­டி­ருந்த  போது, ஐந்து இளை­ஞர்கள் மாண­வியின் காத­லனைத் தாக்கி அவரை மயக்­க­முறச் செய்­ததன் பின்னர் மாண­வியைக் கடத்திச் சென்று  கூட்டு வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

மயக்கம் தெளிந்த மாண­வியின் காதலன் நடந்த சம்­ப­வத்தை மஹி­யங்­கனைப் பொலி­ஸா­ருக்­கு­அ­றி­வித்­த­தும் பொலிஸார் மேற்­கொண்ட உட­னடி நட­வ­டிக்­கை­யினால்  சந்­தே­கத்தின் பேரில் இளை­ஞர்கள் கைது­செய்­யப்­பட்­ட­துடன் பாதிக்­கப்­பட்ட மாணவி மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்டு, சிகிச்­சை­பெற்­று­வ­ரு­கின்றார்.

இந்தச் சம்­பவம் தொடர்பில் மஹி­யங்­கனை  பொலிஸார்  விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ளனர்.

கைது செய்யப்பட்ட ஐவரையும்  மஹியங்கனை  நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டு ள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 144 times, 1 visits today)

Post Author: metro