பொலிஸ் அதிகாரியால் நிர்வாணமாக்கப்பட்ட மாணவன் தொடர்பில் முறைப்பாடு கிடைத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் – சிலாபம் பிராந்திய உயர் பொலிஸ் அதிகாரி

(ரெ.கிறிஷ்­ணகாந்)

சிலாபம் பொலிஸ் நிலை­யத்தைச் சேர்ந்த அதி­காரி ஒரு­வரால் பாட­சாலை மாணவர் பொது இடத்தில் வைத்து நிர்­வா­ண­மாக்­கப்­பட்­ட­தாக கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் முறைப்­பாடு கிடைக்கப் பெறு­மாயின் அது­தொ­டர்பில் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­படும் என அப்­பி­ராந்­தி­யத்­துக்கு பொறுப்­பான உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

அண்­மையில் சிலாபம் பிர­தே­சத்­தி­லுள்ள பொது இட­மொன்றில் வைத்து பொலி­ஸாரால் நிர்­வா­ண­மாக்­கப்­பட்­டதால் அசௌ­க­ரி­யத்­துக்கு உள்­ளான மாணவன் தொடர்பில் பர­வ­லாகப் பேசப்­பட்டு வந்­த­போ­திலும் அது தொடர்பில் எவ்­வித முறைப்­பா­டு­களும் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­க­வில்லை இந்த சம்­ப­வத்­தை­ய­டுத்து, அம்­மா­ணவன் பாட­சா­லைக்கு செல்­வதை தவிர்த்து அவ­மா­னத்தில் வீட்­டி­னுள்­ளேயே இருப்­ப­தாக அவ­ரது பெற்றோர் ஊட­கங்­க­ளுக்குக் கருத்து தெரி­வித்­துள்­ளனர். அத்­துடன் இம் மாணவன் இம்­முறை சாதா­ரண தரப் பரீட்­சைக்கு தோற்­ற­வுள்­ள­தா­கவும் பொலிஸ் அதி­கா­ரியின் இத்­த­கைய செயற்­பாட்­டினால் தற்­போது அவ­ரது கற்றல் நட­வ­டிக்­கைகள் ஸ்தம்­பி­தம்­டைந்­துள்­ள­தா­கவும் மாண­வ­ரது பெற்றோர் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளனர்.

கடந்த 11 ஆம் திகதி சிலாபம் – மாளி­கா­வத்த பிர­தே­சத்­துக்கு சென்ற பொலிஸார் சுற்­றி­வ­ளைப்­பொன்றை மேற்­கொண்­டுள்­ளனர் எனவும் அதன்­போது சோதனை மேற்­கொள்ளும் பொருட்டு மேற்­படி மாணவன் அணிந்­தி­ருந்த சாரத்­தினை அவிழ்த்து பொலிஸ் அதி­கா­ரி­யொ­ருவர் அவரை நிர்­வா­ணப்­ப­டுத்­தினார் என்றும் மாண­வனின் பெற்றோர் தெரி­விக்­கின்­றனர்.

இச்­சம்­பவம் இடம்­பெற்ற வேளையில் அய­ல­வர்கள் மற்றும் அம்­மா­ண­வனின் நண்­பர்கள், சுற்­றத்தார் அனை­வரும் பார்த்துக் கொண்­டி­ருந்­த­மை­யினால் தனது மகன் மிகுந்த உளத் தாக்­கத்­துடன், அவ­மா­னத்­து­டனும் காணப்­ப­டு­வ­தாக மாண­வனின் பெற்றோர் ஊட­க­மொன்­றுக்கு கருத்து பர்கள், சுற்­றத்தார் அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தமையினால் தனது மகன் மிகுந்த உளத் தாக்கத்துடன், அவமானத்துடனும் காணப்படுவதாக மாணவனின் பெற்றோர் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்..

(Visited 39 times, 1 visits today)

Post Author: metro