மீரிகம அழகுசிகிச்சை நிலையத்தில் உயிரிழந்து காணப்பட்ட மீரிகம பொலிஸ் உத்தியோகத்தரின் மகளின் மரணத்தில் மர்மம்

(ரெ.கிறிஷ்­ணகாந்)

 

மீரி­கம பொலிஸ் நிலை­யத்­துக்கு முன்­பாக அமைந்­துள்ள அழ­கு­ சிகிச்சை நிலையம் ஒன்றில் நேற்­று­முன்­தினம் பிற்­பகல் சந்­தே­கத்­துக்­கி­ட­மான முறையில் யுவதி ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர், பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்­துள்ளார்.


பயிற்­சி­க­ளுக்­காக குறித்த அழ­கு­ சிகிச்சை நிலையத்­துக்கு வந்­தி­ருந்த யுவ­தியே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ள­தாக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.


மீரி­கம, கித­ல­வ­லான பிர­தே­சத்தை சேர்ந்த 21 வய­தான தினேஷா சத்­து­ரங்­கனி என்ற யுவ­தியே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும், இந்த யுவ­தியின் தந்தை மீரி­கம பொலிஸ் நிலை­யத்தில் கட­மை­யாற்றி வரு­ப­வ­ரென்றும் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

அவர் குறித்த அழ­கு­சா­தன நிலை­யத்­தினுள் உயி­ரி­ழந்து கிடப்­பதைக் கண்டு பெண்­ணொ­ருவர் மீரி­கம பொலிஸ் நிலை­யத்­துக்கு அறி­வித்­த­தா­கவும் தெரி­ய­வந்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து சம்­பவ இடத்­துக்கு விரைந்த பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­போது குறித்த சிகை­ய­லங்­கார நிலை­யத்தில் பணி­யாற்­றி­வந்த மற்­றொரு யுவதி அவ்­வி­டத்தில் இருக்­க­வில்லை என தெரி­ய­வந்­துள்­ளது.

அதன்­பின்னர் பொலிஸார் அந்த யுவ­திக்கு தொலை­பேசி அழைப்­பு­வி­டுத்து உட­ன­டி­யாக சம்­பவ இடத்­துக்கு வரு­மாறு அழைத்­துள்­ளனர். அதற்கு அவர், அன்­றைய தினம் மாலை அவ்­வி­டத்­துக்கு வரு­வ­தாக பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­த­போ­திலும் அவர் வர­வில்லை என பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

யுவ­தியின் சட­லத்­துக்கு அருகில் இலத்­தி­ர­னியல் முடி உலர்த்தும் கருவி மற்றும் மல்டி ப்ளக் ஆகி­யன வீழ்ந்து காணப்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். அத்­துடன் அவ்­வி­டத்தைச் சுற்றி நீர் தெளிக்­கப்­பட்டு காணப்­பட்­ட­தா­கவும், மின்­சார தாக்­கு­தலால் இந்த யுவதி உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் எனவும் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டு­வரும் மீரி­கம பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

நேற்று முன்­தினம் பிற்­பகல் அத்­த­ன­கல்ல பதில் நீதிவான் எம்.பீ. சிறி­பால சம்­பவ இடத்­துக்குச் சென்று நீதிவான் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டதன் பின்னர் அவ­ரது உத்­த­ர­வுக்­க­மைய சடலம் வத்­து­பிட்­டி­வல ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.


இந்­நி­லையில், சம்­பவம் தொடர்­பாக மேல­திக விசா­ர­ணை­களை மீரி­கம பொலிஸார் முன்­னெ­டுத்­து­வ­ரு­வ­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர், பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர தெரிவித்துள்ளார்.

(Visited 322 times, 1 visits today)

Post Author: metro