1978 : கட்­டு­நா­யக்­க­வுக்கு அருகில் விமான விபத்து: 183 பேர் பலி

வரலாற்றில் இன்று..

நவம்பர் – 15

 

1505 : போர்த்­துக்­கேய மாலு­மியும் நாடுகாண் பய­ணி­யு­மான லோரன்ஸ் டி அல்­மெய்டா, கொழும்பை வந்­த ­டைந்து ஐரோப்­பியக் குடி­யேற்­றத்தை ஆரம்­பித்தார்.

1889 : பிரேஸில் குடி­ய­ர­சா­கி­யது. மன்னர் பெட்ரோ இரா­ணுவப் புரட்­சி­ யினால் ஆட்­சி­யி­லி­ருந்து அகற்­றப்­பட்டார்.

1942 : இரண்டாம் உலகப் போர்: சொலமன் தீவு­களில் குவா­டல்­கனல் என்ற இடத்தில் ஜப்­பா­னியக் கடற்­ப­டை­யுடன் இடம்­பெற்ற மோதல்­களில் கூட்டுப் படைகள் வெற்றி பெற்­றன.

1943 : நாஸி ஜேர்­ம­னியில் அனைத்து ஜிப்­சி­க­ளையும் யூதர்­க­ளுக்கு இணை­யாக வதை­மு­காம்­க­ளுக்கு அனுப்ப உத்­த­ர­வி­டப்­பட்­டது.

1948 : 1948 ஓகஸ்ட் 20 ஆம் திகதி நாடா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை பிர­ஜா­வு­ரிமைச் சட்­ட­ மூலம் நவம்பர் 15 இல் அமு­லுக்கு வந்­தது. இதனால், சுமார் 7 லட்சம் மலை­யகத் தமி­ழர்கள் நாடற்­ற­வர்­க­ளா­யினர்.

1949 : இந்­தி­யாவில் நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் ஆப்டே இரு­வரும் மகாத்மா காந்­தியைக் கொலை செய்த குற்­றஞ்­சாட்டில் தூக்­கி­லி­டப்­பட்­டனர்.

1966 : ஜெமினி 12 விண்­கலம் அத்­தி­லாந்திக் கடலில் பாது­காப்­பாக இறங்­கி­யது.

1969 : வோஷிங்டன் டிசி நகரில் சுமார் 500,000 பேர் வியட்நாம் போருக்­கெ­தி­ரான ஆர்ப்­பாட்ட ஊர் ­வ­லத்தில் பங்­கு­பற்­றினர்.

1970 : சோவியத் ஒன்­றி­யத்தின் லூனா தானூர்தி சந்­தி­ரனில் தரை ­யி­றங்­கி­யது.

1971 : இன்டெல் நிறு­வனம் உலகின் வர்த்­தக ரீதி­யி­லான முத­லா­ வது ஒற்றை சிப் மைக்ரோ புரொ­ஸ­ஸரை வெளி­யிட்­டது.

1978 : சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுடன் இந்­தோ­னே­ஷி­யா­வுக்கு சென்­று­கொண்­டி­ருந்த டிசி-8 ரக தனியார் பய­ணிகள் விமானம் கட்­டு­ நா­யக்க விமான நிலை­யத்தில் இறங்க முற்­பட்­ட­போது விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 183 பேர் பலி­யாயினர்.

1983 : வடக்கு சைப்­பிரஸ் துருக்­கியக் குடி­ய­ரசு நிறு­வப்­பட்­டது. துருக்கி மட்­டுமே இதனை அங்­கீ­க­ரித்­தது.

1988 : சோவியத் ஒன்­றி­யத்தின் ஆளற்ற புரான் விண்­ணோடம் தனது முத­லா­வதும் கடை­சி­யு­மான பய­ணத்தை ஆரம்­பித்­தது.

1988 : பலஸ்­தீன நாடு பாலஸ்­தீன தேசிய கவுன்­சி­லினால் பிர­க­ட­னப் ­ப­டுத்­தப்­பட்­டது.

1989 : கராச்­சியில் ஆரம்­ப­மான போட்டி மூலம் இந்­தி­யாவின் சச்சின் டெண்­டுல்­கரும் பாகிஸ்­தானின் வக்கார் யூனிஸும் டெஸ்ட் கிரிக்­கெட்­டுக்கு அறி­மு­க­மா­கினர்.

2002 : ஹு ஜிந்­தாவோ சீனக் கம்­யூனிஸ்ட் கட்­சியின் பொதுச் செய­லா­ள­ரானார்.

2000 : இந்­தி­யாவில் ஜார்க்கண்ட் தனி­மா­நி­ல­மாக உரு­வாக்­கப்­பட்­டது.

2007 : பங்­க­ளா­தேஷில் கிளம்­பிய பெரும் சூறா­வ­ளி­யினால் 5,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

2013 : பொது­ந­ல­வாய தலை­வர்­களின் 23 ஆவது உச்­சி­மா­நாடு கொழும்பில் ஆரம்­ப­மா­கி­யது.

2014 : பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கெமரூன், யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்த முத­லா­வது வெளி­நாட்டு அரசாங்கத் தலைவரானார்.

(Visited 31 times, 1 visits today)

Post Author: metro