19 வயதின்கீழ் ஆசிய இளையோர் கிண்ண கிரிக்கெட்: நடப்பு சம்பியன் இந்தியாவுடன் இலங்கையும் ‘அவுட்’ அரை இறுதிகளில் நேபாளம், ஆப்கானிஸ்தான்

மலே­ஷி­யாவின் கின்­ரா­ரா­விலும் பயொ­மா­ஸிலும் நடை­பெற்­று­வரும் 19 வய­துக்­குட்­பட்ட ஆசிய இளையோர் கிரிக்கெட் போட்­டி­களில் நடப்பு சம்­பியன் இந்­தி­யாவும் கடந்த வருடம் இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்­கையும் அரை இறுதி வாய்ப்­பு­களை இழந்து ஏமாற்­றத்­துடன் நாடு திரும்­ப­வுள்­ளன.

பாகிஸ்தான் மற்றும் பங்­க­ளா­தே­ஷுடன் முற்­றிலும் எதிர்­பா­ராத நாடு­க­ளான ஆப்­கா­னிஸ்­தானும், நேபா­ளமும் அரை இறு­தி­க­ளுக்கு முன்­னே­றி­யுள்­ளன.

பாகிஸ்­தானும், பங்­க­ளா­தேஷும் ஏற்­க­னவே அரை இறுதி வாய்ப்­பு­களைப் பெற்­று­விட்ட நிலையில் ஆப்­கா­னிஸ்­தானும் நேபா­ளமும் தீர்­மா­ன­மிக்க கடைசி லீக் போட்­டி­களில் பங்­கு­பற்­றின.

ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தை எதிர்த்­தா­டிய ஆப்­கா­னிஸ்தான் 134 ஓட்­டங்­களால் மிக இல­கு­வாக வெற்­றி­பெற்று அணிகள் நிலையில் இலங்­கையை மூன்றாம் இடத்­திற்கு பின்­தள்ளி அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்­தது.

ஆப்­கா­னிஸ்தான் இளையோர் அணி வீரர் தார்விஷ் ரசூலி இந்த சுற்றுப் போட்­டியில் முத­லா­வது சதத்தைப் பெற்­றமை விசேட அம்­ச­மாகும்.

எண்­ணிக்கை சுருக்கம்

ஆப்­கா­னிஸ்தான் 50 ஓவர்­களில் 224 – 3 விக். (தார்விஷ் ரசூலி 105 ஆ.இ., ரஹ்மான் குல் 59)
ஐக்­கிய அரபு இராச்­சியம் 20 ஓவர்­களில் சக­லரும் ஆட்­ட­மி­ழந்து 90 (மொனிஷ் லக்­ஹானி 36, தாரிக் ஸ்டெனிக்ஸாய் 10 – 2 விக்., வபாதார் 14 – 2 விக்., நவீன் உல் ஹக் 17 – 2 விக்.), முஜீப் 18 – 2 விக்.)

இந்­தி­யா­வுக்கு மீண்டும் தோல்வி

நேபா­ளத்­திடம் தோல்வி அடைந்து மன உளைச்­ச­லுக்கு உள்­ளான இந்­தியா நேற்று நடை­பெற்ற போட்­டியில் பங்­க­ளா­தே­ஷி­டமும் தோல்வி அடைந்து சுற்றுப் போட்­டி­யி­லி­ருந்து வெளி­யே­றி­யது.

32 ஓவர்­க­ளாக மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட போட்­டியில் இந்­தி­யாவை 187 ஓட்­டங்­க­ளுக்கு கட்­டுப்­ப­டுத்­திய பங்­க­ளாதேஷ் 8 விக்­கெட்கள் மீத­மி­ருக்க வெற்றி இலக்கை கடந்­தது.

எண்­ணிக்கை சுருக்கம்

இந்­தியா 32 ஓவர்­களில் 187 – 8 விக். (எஸ்.எவ். கான் 39, அனுஜ் ராவத் 34, ரொபியுள் ஹொக் 43 – 3 விக்.)
பங்களாதேஷ் 28 ஓவர்களில் 191 – 2 விக். (பினக் கோஷ் 81 ஆ.இ., தொஹித் ஹ்ரிதோய் 48 ஆ.இ.)

(Visited 43 times, 1 visits today)

Post Author: metro