‘என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை’ – நீது சந்திரா

தனக்கு சரி­யான பட வாய்ப்­புகள் அமை­ய­வில்லை என நடிகை நீது சந்­திரா வேதனை தெரி­வித்­துள்ளார்.

யாவரும் நலம், ஆதி பகவன், தீராத விளை­யாட்டு பிள்ளை ஆகிய படங்­களில் நடித்­தவர் நடிகை நீது. அப்­ப­டங்­க­ளுக்கு பின் அவ­ருக்கு சரி­யான வாய்ப்­புகள் அமை­ய­வில்லை. பொலி­வூட்டில் நடிக்க முயன்றும் பெரிய வெற்றி இல்லை.

இந்­நி­லையில் இது­பற்றி கருத்து தெரி­வித்­துள்ள நீது­சந்­திரா, “என் தனிப்­பட்ட வாழ்க்­கையில் பல பிரச்­சி­னை­களை சந்­தித்­துள்ளேன்.

 

4 வரு­டத்­திற்கு முன் எனது தந்­தையை இழந்­து­விட்டேன். எனவே, எனது குடும்­பத்தின் மீது மட்­டுமே கவனம் செலுத்­தினேன்.

 

ஆனால், துர­திர்ஷ்­ட­வ­ச­மாக எனக்கு நிறைய வாய்ப்­பு­களும் கிடைக்­க­வில்லை.

 

எனது திற­மை­களும் கவ­னிக்­கப்­ப­ட­வில்லை. என்னை வழி­ந­டத்த சரி­யான ஆள் இல்லை. நான் எந்த தயா­ரிப்­பா­ள­ரு­டனும், இயக்­கு­ந­ரு­டனும் இணைந்து பணிபுரிய தயாராக இருக்கிறேன்” என்று தன­து ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

(Visited 113 times, 1 visits today)

Post Author: metro