புத்தபெருமானின் உருவத்தை வலது கையில் பச்சை குத்தியதால் நாடு கடத்தப்பட்ட பிரித்தானிய பெண்ணுக்கு 6 இலட்சம் ரூபா நஷ்ட ஈடு ; 2 இலட்சம் ரூபாவை வழக்கு செலவாக வழங்கவும் உயர் நீதிமன்று உத்தரவு

(ரெ.கிறிஷ்ணகாந்)

தனது வலது கையில் புத்தபெருமானின் உருவத்தை பச்சை குத்தியவாறு இலங்கை வந்திருந்தபோது கைது செய்யப்பட்ட பிரித்தானி பிரஜையான பெண் ஒருவர் ஒருவரை தடுப்பில் வைத்திருந்து நாடு கடத்தியமைமை வழக்கின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் குறித்த பெண்ணின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக  உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதற்கமைய நயோமி கொல்மன் என்ற பிரித்தானி பெண்ணுக்கு அரச நிதியிலிருந்து 5 இலட்சம் ரூபா நஷ்­ட­ஈ­டாக செலுத்­து­மாறும் அவரை கைது செய்த கட்­டு­நா­யக்க பொலிஸ் நிலை­யத்தின் இரு பொலிஸ் அதி­கா­ரி­களை தலா 50 ஆயிரம் ரூபா நட்­ட­ஈடு செலுத்­து­மாறும் உயர் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. மேலும் வழக்கு கட்­ட­ண­மாக இரண்டு இலட்சம் ரூபா­வினை மனு­தா­ர­ருக்கு செலுத்­து­மாறு உயர்­நீ­தி­மன்றம் பிர­தி­வா­திகள் தரப்­பி­ன­ருக்கு உத்­த­ர­விட்­டது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்­கைக்கு வந்த குறித்த பிரித்­தா­னிய பிர­ஜையின் வலது கையில் பௌத்த மதத்தை அவ­ம­திக்கும் வகையில் புத்­த­பெ­ரு­மானின் உருவம் பச்சை குத்­தப்­பட்­டி­ருந்த குற்­றச்­சாட்டில் தான் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­தாக அவர் உயர்­நீ­தி­மன்றில் அடிப்­படை உரி­மை­மீறல் மனு­வொன்றை தாக்கல் செய்­தி­ருந்தார்.

நயோமி கொல்மன் நாடு­க­டத்­தப்­பட்­டமை குறித்து இலங்கை மனித உரிமை சட்­ட­வல்­லு­நர்கள் தெரி­விக்­கையில், பச்சை குத்­தி­ய­மைக்­காக நப­ரொ­ரு­வரை நாடு­க­டத்­து­வ­தற்கு நீதி­வா­னுக்கு அதி­காரம் இல்­லை­யெ­னவும், எவ­ரொ­ருவர் இலங்­கை­யி­லி­ருந்து நாடு­க­டத்­தப்­ப­டு­வா­ராயின் குடி­வ­ரவு, குடி­ய­கல்வு சட்­டத்தை மீற­யமை மாத்­தி­ரமே அதற்­கான கார­ண­மாக இருக்க முடி­யு­மெ­னவும் அதனை விடவும் காரணம் இருக்­கு­மாயின் அவ்­வா­றான உத்­த­ரவை பிறப்­பிக்க வெளி­வி­வ­கார அமைச்­ச­ருக்கு மாத்­தி­ரமே அதி­காரம் உண்­டெ­னவும் மனித உரி­மைகள் சட்­டத்­த­ரணி சத்­தி­ர­பால குமா­ரகே சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இதே­வேளை, தான் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட வேளையில் பொலி­ஸாரின் அறிக்­கைக்கு அமைய நீதிவான் தீர்ப்­ப­ளித்­த­தா­கவும் தன்­னிடம் எவ்­வித கேள்­வி­க­ளையும் நீதிவான் கேட்­காமல் நாடு­க­டத்த உத்­த­ர­விட்­ட­தா­கவும் நயோமி கொல்மன் தெரி­வித்­துள்ளார்.

பௌத்த மதத்தின் மீது தான் கொண்­டி­ருக்கும் பற்றின் கார­ண­மாக இவ்­வாறு பச்சை குத்­தி­ய­தா­கவும், பௌத்த மதத்­துக்கு அவ­ம­ரி­யாதை உண்­டாக்கும் வகையில் தான் இந்த செயற்­பாட்டை மேற்­கொள்­ள­வில்லை என மனுதாரர் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவில் கட்டுநாயக்க பொலிஸ் அதிகாரிகள் சிலரும், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப் பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்றைய தினம் இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பு உயர்நீதிமன்றினால் வழங் கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 136 times, 1 visits today)

Post Author: metro