ஆடைகளைக் களைந்து புடவைத் துண்டினால் சுற்றப்பட்டு சவூதி விமான நிலையத்தில் விட்டுச் செல்லப்பட்ட இலங்கைப் பெண்

(ரெ.கிறிஷ்­ணகாந்)

சவூதி அரே­பி­யா­வுக்குத் தொழி­லுக்­காக சென்று பலத்த காயங்­க­ளுடன், ஆடை­களைக் களைந்து புடவைத் துண்­டினால் சுற்­றப்­பட்டு சவூதி விமான நிலை­யத்தில் விட்­டுச்­செல்­லப்­பட்ட இலங்கை பணிப்­பெண்­ணொ­ருவர் நேற்று முன்­தினம் நாடு திரும்­பி­யுள்­ள­தாக வெளிநாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் தெரிவித்­துள்­ளது.

இவர் கலே­வெல, பம்­ப­ர­கஸ்­தெ­னிய பிர­தே­சத்தை சேர்ந்த 33 வய­தான பெண்­ணொ­ரு­வ­ரெனத் தொிவிக்­கப்­பட்­டுள்­ளது.

நான்கு வய­தான தனது மக­ளையும், கண­வ­ரையும் விட்­டு­விட்டு குரு­ணாகல் பிர­தே­சத்­தி­லுள்ள வௌிநாட்டு வேலை­வாய்ப்பு முகவர் நிலை­ய­மொன்றின் உத­வி­யுடன் தனது சுய­வி­ருப்­பத்­தில் இப்பெண் 2016 ஆம் ஆண்டு செப்­டெம்பர் 5 ஆம் திகதி பணிப்­பெண்­ணாக சவூதி சென்­றுள்ளார்.

பின்னர் சவூதியின் தமாம் பிர­தே­சத்­தி­லுள்ள வீடொன்றில் பணி­யாற்­றி­வந்­தி­ருந்­த­தா­கவும் அவ் ­வீட்டில் பணி­யாற்­றி­ய­மைக்­காக தனக்கு மூன்று மாத கொடுப்­ப­னவு வழங்­கப்­பட்­ட­தா­கவும் அப் பெண் தொிவித்­துள்ளார்.

நான்­கா­வது மாதத்தின் ஆரம்­பத்­தி­லி­ருந்து அவ்­ வீட்டார் தனக்­கான உணவு, உடை மற்றும் கொடுப்­ப­னவு என்­ப­வற்றை இடை­நி­றுத்­தி­ய­துடன் அன்று முதல் தன்­ மீது தாக்­குதல் நடத்த ஆரம்­பித்­த­தா­கவும் தொிவித்தார்.

இறு­தியில் அவ் ­வீட்டார், தன்னைக் கொடூ­ர­மாகத் தாக்­கி­ய­துடன் தனது ஆடை­களை அவிழ்த்து, தன்னை கறுப்பு நிறப் புட­வை­யொன்­றினால் சுற்றி விமான நிலை­யத்­துக்­கொண்டு வந்து விட்டுச் சென்­ற­தா­கவும் பின்னர் விமான நிலை­யத்­தி­லி­ருந்த இலங்­கையை சேர்ந்த பெண்கள் சிலரால் தனக்கு வழங்­கப்­பட்ட ஆடையை அணிந்து கொண்டு தான் நேற்று முன்­தினம் நாட்­டுக்கு வந்­த­தாக அப் பெண் தொிவித்­துள்ளார்.

நாடு திரும்­பி­யுள்ள அப் ­பெண்ணின் கால், கைகளில் கடு­மை­யான காயங்கள் காணப்படுவதாகவும் கண் இமை மற்றும் முதுகுப் பகுதிகளிலும் காயங்கள் காணப்படுவதுடன் முறையாக நடக்க இயலாத நிலைக்கு தான் ஆளாகி இருப்பதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 419 times, 1 visits today)

Post Author: metro