2017 உலக அழகியாக இந்திய மருத்துவ மாணவி மானுஷி ஷில்லர் தெரிவு

புதிய உலக அழ­கு­ரா­ணி­யாக இந்­தி­யாவைச் சேர்ந்த மானுஷி ஷில்லர் தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார்.

2017 ஆம் ஆண்­டுக்­கான உலக அழ­கு­ராணி போட்டி சீனாவில் நடை­பெற்­றது. 118 அழ­கு­ரா­ணிகள் இப்­போட்­டியில் பங்­கு­பற்­றினர். இறு­திச்­சுற்றுப் போட்டி நேற்­று­முன்­தினம் நடத்­தப்­பட்­டது.

இதில், இந்­தி­யாவைச் சேர்ந்த மானுஷி ஷில்லர் முத­லிடம் பெற்று 2017ஆ-ம் ஆண்­டுக்­கான உலக அழ­கி­யாக முடி­சூட்­டப்­பட்டார்.

20 வய­தான மானுஷி ஷில்லர், இந்­தி­யாவின் ஹரி­யானா மாநி­லத்தைச் சேர்ந்­தவர். இவர் மருத்­துவக் கல்­லூ­ரி­யொன்றின் 2 ஆம் வருட மாணவி என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இவரின் தந்தை மித்ரா பாசு ஷில்­லரும், தாய் நீலம் ஷில்­லரும் மருத்­து­வர்கள். ஹரி­யா­னாவில் உள்ள பகத் புல் சிங் மருத்­துவக் கல்­லூ­ரியில் படித்து வரு­கிறார் மானுஷி ஷில்லர்.

இறு­திச்­சுற்றில் வெற்­றி­யா­ளரை தேர்வு செய்­வ­தற்­கான கேள்­வி­களின் போது, இந்­திய அழகி மானு­ஷி­யிடம், “உலகில் எந்த தொழிலில் ஈடு­பட்­டி­ருப்­பவர் அதிக சம்­ப­ளத்­திற்கு தகுதி வாய்ந்­தவர்? ஏன்? “எனக் கேட்­கப்­பட்­டது.

 

அதற்கு மானுஷி, “உலகில் உயர்ந்த மரி­யா­தைக்கு தகு­தி­யா­னவர் தாய் மட்­டுமே. அவ­ரது சம்­பளம் வெறும் பண­மல்ல. அன்பும், மரி­யா­தை­யும்தான்” என பதி­ல­ளித்தார்.

சிறு­வ­யது முதலே உலக அழகிப் போட்­டியில் பங்­கேற்க வேண்டும் என்­பது எனது கன­வாக இருந்­தது. ஆனால், அது நடை­பெறும் என்று நினைத்துக் கூட பார்த்­த­தில்லை. இந்த தரு­ணத்தை எனது வாழ்நாள் முழு­வதும் நான் நிச்­சயம் மறக்க மாட்டேன் என்றார்.


2017ஆ-ம் ஆண்­டுக்­கான இந்­திய அழ­கு­ரா­ணி­யாக தெரி­வான மானுஷி ஷில்லர், பெண்­க­ளுக்கு ஏற்­படும் மாத­விடாய் கோளா­றுகள் குறித்த விழிப்­பு­ணர்­வுவை ஏற்­ப­டுத்தி வரு­கிறார். இதனால் தற்­போது வரை சுமார் 5,000 பெண்கள் பய­ன­டைந்து உள்­ள­தா­கவும் அதற்­காக இறை­வ­னுக்கு நன்றி தெரி­வித்­துக்­கொள்­வ­தா­கவும் மானுஷி தெரி­வித்­துள்ளார்.

உலக அழ­கு­ரா­ணி­யாக தெரி­வான 6 ஆவது இந்­தியப் பெண் மானுஷி ஷில்லர் ஆவார். 1966 ஆம் ஆண்டு ரீட்டா ஃபரீயா உலக அழ­கு­ராணி பட்­டத்தை வென்ற முத­லா­வது இந்­தியப் பெண்­ணானார்.


1994 ஆம் ஆண்டில் ஐஸ்­வர்யா ராய், 1997 ஆம் ஆண்டில் டயானா ஹைடன், 1999 யுக்தா முகி, 2000 ஆம் ஆண்டு பிரியங்கா சோப்ரா ஆகியோர் இப்பட்டத்தை வென்றனர். தற்போது 17 வருடங்களின் பின் மானுஷி ஷில்லர் இப்பட்டத்தை இந்தியாவுக்கு பெற்றுக்கொடுத்துள்ளார்.

(Visited 176 times, 1 visits today)

Post Author: metro