கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து கொலை செய்த மனைவி

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவருக்கு விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து கொலை செய்த மனைவியை தமிழகத்தின் ஊத்துக்கோட்டை பகுதி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து பொலிஸ் தரப்பில் தெரிவித்துள்ளதாவது, ஊத்துக்கோட்டை அருகே தொளவேடு கிராமத்தை சேர்ந்தவர் முத்து (வயது 30). இவரது மனைவி இந்து (வயது 21). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில், மனைவி மீது சங்கருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டதால் இந்து கோபித்துகொண்டு அருகேயுள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதையடுத்து, இந்துவுடன் மாமியார் குடும்பம் சங்கரை சந்திக்க சென்றுள்ளனர். அங்கு சங்கர், வாயில் இரத்தம் வடிந்த நிலையில் இறந்து கிடந்ததால் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவலறிந்த ஊத்துக்கோட்டை பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று சங்கரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுபற்றி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துள்ளனர். சங்கரின் தம்பி லோகநாதன் கொடுத்த புகாரில், “எனது அண்ணன் சங்கர் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

இதுபற்றி மனைவி இந்துவிடமும் அவருடன் கள்ள தொடர்பு வைத்துள்ள குமாரிடமும் (வயது 21) விசாரிக்கவேண்டும்” என கூறியிருந்தார். இதன்படி, இந்து, குமார் ஆகியோரிடம் விசாரித்துள்ளனர். குளிர்பானத்தில் பயிர்களுக்கு அடிக்கும் விஷமான கிருமிநாசினியை கலந்து கொடுத்து சங்கரை கொன்றதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

மேலும் இது குறித்து பொலிஸில் தெரிவித்துள்ளதாவது, இந்துவுக்கும் குமாருக்கும் 3 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி தோப்பில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதையறிந்த முத்து, மனைவியை பலமுறை கண்டித்துள்ளார்.

ஆனால், இந்து கேட்கவில்லை. இதனால், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி குமாரிடம் இந்து கூறி, கணவர் தினமும் தன்னை அடித்து சித்திரவதை செய்வதாக அழுதுள்ளார். இதனால், இருவரும் சேர்ந்து சங்கரை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். சம்பவத்தன்று கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டபோது குமாரிடம் குளிர்பானம் வாங்கி வரும்படி இந்து கூறியுள்ளார்.

பின்னர் அதில் பயிர்களுக்கு அடிக்கும் விஷமான கிருமிநாசினியை கலந்துவிட்டு, கணவரிடம் சமாதானம் செய்வதுபோல் நடித்து, குளிர்பானம் குடிக்க கொடுத்துள்ளார்.

அவர் மயங்கி கட்டிலில் படுத்ததும் அங்கிருந்து மாமியார் வீட்டுக்கு சென்று, தன்னை சங்கர் அடித்து துன்புறுத்துவதாக நாடகமாடி அங்கேயே தங்கியுள்ளார். மறுநாள் ஒன்றும் தெரியாததுபோல் வீட்டுக்கு வந்து கணவரின் சடலத்தை பார்த்து கதறி அழுதுள்ளார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து இந்து, குமார் ஆகியோரை பொலிஸார் கைது செய்து பின்னர் 2 பேரையும் ஊத்துக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

(Visited 50 times, 1 visits today)

Post Author: metro