கிந்தோட்ட கலவரம் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் – தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி

(எம்.ஆர்.எம்.வஸீம்)

கிந்தோட்ட கல­வரம் தொடர்­பாக ஜனா­தி­பதி ஆணைக்­குழு அமைத்து விசா­ரணை நடத்த ஜனா­தி­பதி நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். அத்­துடன் பிரச்­சி­னைக்கு கார­ண­மானவர் யாராக இருந்­தாலும் தரா­தரம் பார்க்­காமல் சட்­டத்­தின்­பி­ர­காரம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அஸாத் சாலி தெரி­வித்தார்.

அதி­கா­ரத்தை பகிர்ந்து ஐக்­கி­யப்­ப­டுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில், காலி கிந்­தோட்­டயில் இடம்­பெற்ற சிறிய சம்­பவம் ஒரு­சி­லரின் அர­சியல் பின்­ன­ணியின் கார­ண­மாக இரு சமூ­கங்­க­ளுக்­கி­டையில் பாரி­ய­தொரு பிரச்­சி­னை­யாக மாறி­யி­ருந்­தது.

அங்கு இடம்­பெற்ற வீதி விபத்தில் காயப்­பட்ட தரப்­புக்கு வாகன உரி­மை­யாளர் தன்னால் முடிந்த உத­வியை செய்­து­விட்டு மேல­திகமான ஏதேனும் தேவைகள் ஏற்­பட்டால் தனக்கு தெரி­விக்­கு­மாறு அவ­ரது தொலை­பேசி இலக்­கத்­தையும் பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ருக்கு அவர் வழங்­கி­யுள்ளார்.

இந்­நி­லையில் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­ப­டாத சிலர் அங்­கு­வந்து வாகன சார­தி­யுடன் முரண்­பட்­ட­த­னாலேயே பிரச்­சினை தீவி­ர­மா­கி­யுள்­ளது.  அத்­துடன் அங்கு இடம்­பெற்ற கல­வரம் தொடர்­பாக சமூக வலைத்­த­ளங்­களில் பொய் பிர­சா­ரங்­களும் மேற்­கொள்­ளப்­பட்டு வந்­தன.  அதனால் மக்கள் மேலும் அச்­ச­ம­டைந்­தனர். இவ்­வாறு வதந்­தி­களை பரப்­பு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக அர­சாங்கம் இது­வரை நட­வ­டிக்கை எடுத்­த­தாக இல்லை.

அத்­துடன் இனங்­க­ளுக்­கி­டையில் பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்­துதல் மற்றும் இன நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் வகையில் தக­வல்­களை பரப்­பு­ப­வர்கள் தொடர்­பாக கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என தொலைத் தொடர்­புகள் ஒழுங்­கு­ப­டுத்தல் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது.

ஆனால் இதுவரை அந்த ஆணைக்குழு யாரையும் கைதுசெய்து தண்டனை வழங்கவில்லை. அவ்வாறு நடவடிக்கை எடுத்திருந்தால் பொய் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதை தவிர்த்திருக்கலாம் என்றார்.

(Visited 10 times, 1 visits today)

Post Author: metro