மட்டு. கொக்கட்டிச்சோலையில் இளைஞர் வெட்டிக்கொலை!

(பெரியபோரதீவு, காங்கேயனோடை நிருபர்கள்)

மட்­டக்­க­ளப்பு கொக்­கட்­டிச்­சோலைப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கற்­சேனை – நீலண்ட மடு பிர­தே­சத்தில் திங்­கட்­கி­ழமை இரவு 7 மணி­ய­ளவில் இடம்­பெற்ற சம்­பவம் ஒன்றில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக கொக்­கட்­டிச்­சோலை பொலிஸார் தெரி­வித்­தனர்.

இச்­சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, மேற்­படி கற்­சேனைப் பகு­தியில் அமைந்­துள்ள நீலண்­ட­மடு எனும் இடத்தில் வீடு ஒன்றில் திங்­கட்­கி­ழமை இரவு தக­ரா­றுகள் இடம்­பெற்­றுள்­ளன. இதனை அய­லி­லி­ருந்து அவ­தா­னித்துக் கொண்­டி­ருந்த இரு இளை­ஞர்கள் தடுக்க முற்­பட்­டுள்­ளனர்.

இதன் போது தக­ராறில் ஈடு­பட்ட நபர் அவ­ரது கையி­லி­ருந்த கத்­தி­யினால் இளைஞர் ஒரு­வனின் வயிற்றை வெட்­டி­யுள்ளார். மேலும் மற்­றைய இளை­ஞ­ருக்கும் சிறு காயம் ஏற்­பட்­டுள்­ளது.

வயிற்றுப் பகு­தியில் வெட்­டுப்­பட்ட இளைஞர் ஸ்தலத்­திலே பலி­யா­கி­யுள்ளார்.  உயி­ரி­ழந்­தவர் அர­ச­டித்­தீவுக் கிரா­மத்தைச் சேர்ந்த 18 வய­தான இளை­ஞ­ராவார்.

உயி­ரி­ழந்­த­வரின் சடலம் மகி­ழ­டித்­தீவு பிர­தேச வைத்­தி­ய­ சா­லையில் வைக்கப் பட்டுள்ளது.  இச்சம்பவம் தொடர்பில் கொக் கட்டிச் சோலைப் பொலிஸார் விசார ணைகளை முன் னெடுத்துள்ளனர்.

(Visited 17 times, 1 visits today)

Post Author: metro