சிறுவனுக்கு ஆபாசப் படங்களைக் காண்பித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த மௌலவி கைது

(ரெ.கிறிஷ்­ணகாந்)

ஏழு வய­தான சிறு­வன் ஒரு­வனை துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் மௌலவி ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக களுத்­துறை – வெலி­பென்ன பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். கைது செய்­யப்­பட்­டுள்ள சந்­தேக நபர் வெலி­பென்ன நகரைச் சேர்ந்த 34 வய­தான மௌலவி ஒரு­வ­ரென பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

பாதிக்­கப்­பட்ட சிறுவன் பள்­ளி­வா­ச­லுக்கு சென்று கடந்த 2 வரு­டங்­க­ளாக மார்க்கக் கல்­வியை கற்று வந்­துள்­ள­தா­கவும், அண்­மையில் சில நாட்­க­ளாக தமது பிள்ளை இவ்­வாறு மௌல­வி­யினால் பாலியல் ரீதி­யாக துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ள­தாக சிறு­வனின் பெற்றோர் வெலி­பென்ன பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

 

சந்­தேக நபர் சிறு­வ­னுக்கு ஆபாசப் படங்­களைக் காண்­பித்து இவ்­வாறு பாலியல் சீண்­ட­லுக்கு உள்­ளாக்­கி­யுள்­ள­தாக முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முறைப்­பாட்­டுக்­க­மைய சந்­தேக நப­ரான மௌல­வியை கைது செய்த வெலி­பென்ன பொலிஸார், அவரை மத்­து­கம நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்து, அவரை எதிர்­வரும் டிசெம்பர் 5 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

இந்­நி­லையில், சம்­பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் வெலிபென்ன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லலித் ராஜமந்திரி தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

(Visited 391 times, 1 visits today)

Post Author: metro