2017 பிரபஞ்ச அழகுராணியாக தென் ஆபிரிக்காவின் டெமி லே நெல் பீட்டர்ஸ் தெரிவு; இலங்கையின் கிறிஸ்டினா பீரிஸ் முதல் 16 பேர் குழுவில்

2017 மிஸ் யூனிவர்ஸ் – Miss Universe  (பிரபஞ்ச அழகுராணி) போட்டியின் இறுதிச் சுற்று அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. 92 அழகுராணிகள் இப்போட்டிகளில் பங்குபற்றினர்.

இலங்கையின் சார்பில் கிறிஸ்டினா பீரிஸ் பங்குபற்றி முதல் 16 பேரில் ஒருவராகத் தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.

 

தென் ஆபிரிக்காவின் டெமி லே நெல் பீட்டர்ஸ் முதலிடம் பெற்று மிஸ் யூனிவர்ஸ் 2017 அழகுராணியாக முடிசூட்டப்பட்டார். ஜெமெய்க்காவின் டேவினா பென்னட் இரண்டாமிடத்தையும் கொலம்பியாவின் லோரா கொன்ஸாலெஸ் 3 ஆம் இடத்தையும் பெற்றனர்.

 

(Visited 127 times, 1 visits today)

Post Author: metro