பசியினால் வாந்தி எடுத்த மாணவியை கர்ப்பவதி எனக் கூறி பாடசாலையிலிருந்து விலக்கியமை தொடர்பான விசாரணை குறித்த அறிக்கை சட்டமா அதிபரிடம்

(ரெ.கிறிஷ்­ணகாந்)

கெக்­கி­ராவ கல்வி வல­யத்­துக்கு உட்­பட்ட பாட­சாலை ஒன்றின் மாணவி ஒருவர் கர்ப்­ப­ம­டைந்­துள்­ள­தாக தெரி­வித்து பாட­சா­லை­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டமை தொடர்பில் தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை­யினால் ஆரம்­பிக்­கப்­பட்ட விசா­ரணை அறிக்கை தற்­போது சட்­டமா அதி­பரின் உத்­த­ர­வுக்­க­மைய சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

கெக்­கி­ராவ கல்வி வல­யத்­துக்கு உட்­பட்ட மாடாட்­டு­கம ரேவத வித்­தி­யா­ல­யத்தில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்­று­வந்த மாணவி ஒருவர் பசி கார­ண­மாக வாந்­தி­யெ­டுத்­தி­ருந்த நிலையில், அவர் கர்ப்­ப­ம­டைந்­துள்­ள­தாக போலிக் குற்­றச்­சாட்டை சுமத்தி கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்­பாக பாட­சா­லை­யி­லி­ருந்து உத்­தி­யோ­க­பூர்­வ­மாக நீக்­கப்­பட்­டி­ருந்தார். இது தொடர்­பாக அப்­பா­ட­சா­லையின் அதிபர் மற்றும் ஆசி­ரி­யர்கள் சிலர் மீது குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

இதன்­போது, குறித்த மாணவி மீது போலிக் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்டு பாட­சா­லை­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­ட­மை­யினால் உள ரீதி­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளதன் கார­ண­மாக 1995 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க தண்­டனைச் சட்டக் கோவை திருத்­தச்­சட்­டத்தின் 308 ‘அ” பிரிவு சரத்தின் கீழ் பதிவு செய்­யப்­ப­டத்­தக்க குற்றம் நிகழ்ந்­துள்­ளதா? மற்றும் அது தொடர்­பான மேல­திக சட்ட நட­வ­டிக்கை என்­பன தொடர்பில் தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னையை கோரி­யுள்­ளது. அதற்­க­மைய இச்­சம்­பவம் தொடர்­பாக சட்­டமா அதி­ப­ரி­ட­மி­ருந்து கிடைக்கும் உத்­த­ர­வுக்­க­மைய மேல­திக நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வுள்­ளன.

தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபையின் விசேட பொலிஸ் விசா­ரணை அதி­கா­ரிகள் சம்­பவம் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டி­ருந்த அதே­வேளை, சட்ட வைத்­திய பரி­சோ­தனை முடி­வு­க­ளுக்­க­மைய குற்­றஞ்­சாட்­டப்­பட்ட மாணவி கர்ப்பம் தரிக்­கவோ, எவ்­வித பாலியல் துஷ்பிரயோகத்துக்கோ உள்ளாகவில்லை என உறுதிப்படுத்தப்பட்டது.

அதனையடுத்து, இது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

(Visited 41 times, 1 visits today)

Post Author: metro