ரஷ்யா 2018 உலகக் கிண்ண கால்பந்தாட்டம் உத்தியோகபூர்வ சுவரொட்டி அறிமுகம்

ரஷ்­யாவில் அடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்ள சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் சம்­மே­ளன (பீபா) உலகக் கிண்ணப் போட்­டி­களை முன்­னிட்டு உத்­தி­யோ­க­பூர்வ சுவ­ரொட்டி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­க­ளுக்­கான குலுக்கல் ரஷ்­யாவின் தலை­நகர் மொஸ்­கோவில் நாளை நடை­பெ­ற­வுள்ள நிலையில் அதற்கு இரண்டு தினங்­க­ளுக்கு முன்னர் இந்த அழ­கிய சுவ­ரொட்டி அறி­முகம் செய்­து­வைக்­கப்­பட்­டுள்­ளது.

ரஷ்ய ஓவியர் இகோர் குரோ­விச்­சினால் வடி­வ­மைக்­கப்­பட்ட இந்த சுவ­ரொட்­டியின் மத்­தியில் ரஷ்­யாவின் முன்னாள் கோல்­காப்­பாளர் லெவ் யாஷினின் உருவம் பதிக்­கப்­பட்­டுள்­ளது. இவர் பெலன் டி’ஓர் விருதை வென்­ற­வ­ராவார்.

சர்­வ­தேச கால்­பந்­தாட்ட அரங்கில் பெலன் டி’ ஓர் விருதை வென்­றுள்ள ஒரே ஒரு கோல்­காப்­பாளர் லெவ் யாஷின் ஆவார்.

ரஷ்ய கலைத்­து­வத்­தையும் கால்பந்தாட் டப் பாரம்பரியத்தையும் இந்த சுவரொட்டி விளக்கி நிற்கின்றது.

(Visited 57 times, 1 visits today)

Post Author: metro