பலப்பிட்டிய கடலில் நீராடச் சென்ற யுக்ரைன் பிரஜையை காணவில்லை

பலப்பிட்டிய கடலில் நீராடச் சென்ற யுக்ரைன் பிரஜையொருவர் நீாில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாக பலப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உக்ரைன் நாட்டிலிருந்து சுற்றுலா வந்துள்ள உக்ரைன் தம்பதியொன்று நேற்று மாலை 6 மணியளவில் கடலில் நீராடச் சென்றிருந்த நிலையில் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அதன்போது அலையில் சிக்குண்ட பெண், அங்கிருந்த பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டிருந்த போதிலும் அப்பெண்ணின் கணவர் நீரில் மூழ்கிக் காணாமல்போயுள்ளார்.

உயிருடன் மீட்கப்பட்டப் பெண் சிகிச்சைகளுக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையில்அனுமதிக்கபட்டுள்ள அதேவேளை, காணாமல்போயுள்ள 38 வயதான உக்ரைன் பிரஜையை தேடும் பணிகள், பிரதேசவாசிகள் மற்றும் கடற்படை சுழியோடிகள் இணைந்து முன்னெடுத்து வருவதாக பலப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

(Visited 16 times, 1 visits today)

Post Author: metro