புதிய மற்றும் மீள் வருகை தரும் அணி­க­ளுக்கு பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தப்­போகும் குலுக்கல்

ரஷ்­யாவில் அடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்ள பீபா உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட இறுதிச் சுற்றில் பங்­கு­பற்­ற­வுள்ள 32 நாடுகள் (அணிகள்) எந்­தெந்த குழுக்­களில் இடம்­பெறப் போகின்­றன என்­ப­தற்­கான குலுக்கல் மொஸ்கோ, க்ரெம்ளின் மாளிகை மண்­ட­பத்தில் இன்று நடை­பெ­ற­வுள்­ளது.

உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட இறுதிச் சுற்று வர­லாற்றில் முதல் தட­வை­யாக பங்­கு­பற்­ற­வுள்ள ஐஸ்­லாந்து, பனாமா ஆகிய நாடு­க­ளுக்கும் சுமார் இரண்டு தசாப்­தங்­களின் பின்னர் மீண்டும் விளை­யாட தகு­தி­பெற்­றுள்ள எகிப்து, மொரோக்கோ, பேரு ஆகிய நாடு­க­ளுக்கும் இந்தக் குலுக்கல் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தப் போகின்­றது.

208 நாடு­க­ளுக்கு இடையில் நடத்­தப்­பட்ட 871 தகு­திகாண் போட்­டி­களின் முடிவில் இறுதிச் சுற்றில் விளை­யா­ட­வுள்ள 31 நாடுகள் தெரி­வா­கின. போட்­டி­களை முன்­னின்று நடத்தும் வர­வேற்பு நாடு என்ற வகையில் ரஷ்யா நேரடி தகு­தியைப் பெற்­றி­ருந்­தது.
ரஷ்ய நேரப்­படி இன்று மாலை 6.00 மணிக்கு நாடு­க­ளுக்­கான குலுக்கல் வைபவம் ஆரம்­ப­மாகும்.

இங்­கி­லாந்தின் முன்னாள் கால்­பந்­தாட்ட வீரரும் மெக்­சிகோ 1986 உலகக் கிண்ணப் போட்­டி­களில் தங்கப் பாத­ணியை வென்­ற­வ­ரு­மான கெறி லினேக்கர், ரஷ்ய ஊட­க­வி­ய­லாளர் மரியா கோமண்ட்­நயா ஆகியோர் கூட்­டாக நெறி­யாள்கை செய்­ய­வுள்­ளனர்.
அத்­துடன் எட்டு முன்னாள் கால்­பந்­தாட்ட விற்­பன்­னர்­க­ளான லோரென்ட் ப்ளான்க் (பிரான்ஸ்), கோர்டன் பாங்க்ஸ் (இங்­கி­லாந்து), காஃபு (பிரேஸில்), ஃபேபியோ கெனா­வரோ (இத்­தாலி), டியகோ ஃபோர்லான் (உரு­குவே), டியகோ மர­டோனா (ஆர்­ஜன்­டீனா), கார்ல் புயோல் (ஸ்பெய்ன்), நிக்­கிட்டா சிமோ­னியன் (ரஷ்யா) ஆகியோர் நாடு­க­ளுக்­கான குலுக்­கலை நடத்­த­வுள்­ளனர்.

பீபா தர­வ­ரி­சைப்­படி 32 நாடு­களும் நிரல்­ப­டுத்­தப்­பட்டு நான்கு சாடி­களில் தலா எட்டு நாடுகள் வீதம் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. ஒவ்­வொரு சாடி­யிலும் உள்ள நாடுகள் ஏ முதல் எச் வரை­யான எட்டு குழுக்­க­ளுக்கு குலுக்கல் மூலம் தெரி­வு­செய்­யப்­படும்.
நிரல்­ப­டுத்­தலின் முன்­னிலை வகிக்கும் வர­வேற்பு நாடான ரஷ்யா, நடப்பு உலக சம்­பியன் ஜேர்­மனி, ஐந்து தட­வைகள் உலக சம்­பி­ய­னான பிரேஸில், போர்த்­துக்கல், முன்னாள் உலக சம்­பியன் ஆர்­ஜன்­டீனா, பெல்­ஜியம், போலந்து, முன்னாள் உலக சம்­பியன் பிரான்ஸ் ஆகிய நாடுகள் முத­லா­வது சாடியில் இடம்­பெ­று­கின்­றன.

இரண்­டா­வது சாடி: முன்னாள் உலக சம்­பியன் ஸ்பெய்ன், பெரு, சுவிட்­சர்­லாந்து, முன்னாள் உலக சம்­பியன் இங்­கி­ல­ாந்து, கொலம்­பியா, மெக்­ஸிகோ, உரு­குவே, குரோஏ­ஷியா.

மூன்­றா­வது சாடி: டென்மார்க், ஐஸ்­லாந்து, கொஸ்டா ரிக்கா, சுவீடன், டியூ­னி­சியா, எகிப்து, செனகல், ஈரான்.
நான்­கா­வது சாடி: சேர்­பியா, நைஜீ­ரியா, அவுஸ்­தி­ரே­லியா, ஜப்பான், மொரோக்கோ, பனாமா, தென் கொரியா, சவூதி அரே­பியா.
ஒவ்­வொரு சாடி­யிலும் உள்ள நாடுகள் குலுக்கல் முறையில் எடுக்கப்பட்டு எட்டு குழுக்களிலும் உள்ளடக்கப்படும். ஒரே பிராந்தியத்தை சேர்ந்த இரண்டு நாடுகளுக்கு மேல் ஒரு குழுவில் இடம்பெறமாட்டாது. ஆனால் ஐரோப்பிய பிராந்தியத்துக்கு இது பொருந்தாது.

(Visited 58 times, 1 visits today)

Post Author: metro