10 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் யாழில் இருவர் கைது

(மயூரன், பாறூக் சிஹான்)

ஹெரோயின் போதைப் பொருளை வைத்­தி­ருந்­தனர் என்ற குற்­றச்­சாட்டில் இருவர் யாழ்ப்­பாணம் திரு­நகர் பகு­தியில் வைத்து நேற்றுக் கைது செய்­யப்­பட்­ட­தாக யாழ்ப்­பாணம் பொலிஸார் தெரி­வித்­தனர்.

திரு­நகர் பகு­தியைச் சேர்ந்த 27, 33 வய­தான இரு­வரே இவ்வாறு கைது செய்­யப்­பட்­டனர். அவர்­க­ளி­ட­மி­ருந்து போதைப் பொரு­ளான ஹெரோயின் ைபக்­கெற்­றுக்கள் இரண்டு கைப்­பற்­றப்­பட்­டன.

குறித்த பைக்­கெற்றி­லி­ருந்த 690 கிராம் கொண்ட போதைப் பொருளின் பெறு­மதி 10 இலட்சம் ரூபா என பொலிஸார் தெரி­வித்­தனர்.
விசா­ர­ணை­களின் பின்னர் சந்­தேக நபர்கள் இரு­வ­ரையும் யாழ்ப்­பாணம் நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.

(Visited 32 times, 1 visits today)

Post Author: metro