‘தலபுட்டுவா’ கொலை தொடர்பில் கைதான அறுவருக்கும் விளக்கமறியல்

கல்கமுவ தலபுட்டுவா என்ற யானையை சுட்டுக் கொன்றமை தொடர்பில் கைது செய்ய்பபட்ட அறுவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரகசிய தகவலொன்றுக்கமைய நிகவெரட்டிய பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் அம்பன் பொல் பொலிஸாரால் பொல்பிதிகம பிரதேசத்தில் வைத்து இச்சம்பவம் தொடர்பில் நேற்றிரவு ஐவர் கைது செய்யப்பட்டனர்.

அதன்போது அச்சந்தேக நபர்களிடமிருந்து யானையின் உடலிலிருந்து தந்தத்தை வெட்டி எடுக்க பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 3 வாள்கள், தந்தங்களால் செய்யப்பட்ட சுரையொன்று, யானைத்தந்த துண்டொன்றும் சிறிய கஜமுத்தொன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவி;க்கின்றனர்.

இவர்கள் ஐவரும் மொரகொல்லாகவை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களுக்கமைய மொரகொல்லாகம – பொதான பிரதேசத்தில் வைத்து 65 வயதான சந்தேக நபரொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் அவரிடமிருந்து யானையை சுட்டுக்கொல்ல பயன்படுத்தியதாக கருதப்படும் துப்பாக்கியொன்றை மீட்டுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அறுவரும் இன்றைய தினம் மஹவ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டது.

(Visited 39 times, 1 visits today)

Post Author: metro