பெக் ஸ்ட்ரீட் போய்ஸ் பாடகர் நிக் கார்ட்டர் மீது பாடகி மெலிஸா பாலியல் குற்றச்சாட்டு

பெக் ஸ்ட்ரீட் போய்ஸ் எனும் பிர­பல அமெ­ரிக்க இசைக்­கு­ழுவைச் சேர்ந்த பாட­கர்­களில் ஒரு­வரும் நடி­க­ரு­மான நிக் கார்ட்டர் தன்னை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­ய­தாக பாடகி மெலிஸா சூமென் குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

 

ஆனால், இக்­குற்­றச்­சாட்­டுகள் பொய்­யா­னவை எனக் கூறும் பாடகர் நிக் கார்ட்டர், இக்­குற்­றச்­சாட்டு கார­ண­மாக தான் மிகவும் கலை­ய­டைந்­துள்­ள­தாக தெரி­வித்­துள்ளார்.

திரைப்­பட மற்றும் இசைத்­து­றை­யி­லுள்ள பிர­ப­லங்கள் மீது அண்­மைக்­கா­ல­மாக பெண்கள் பலர் பாலியல் குற்­றச்­சாட்­டு­களை சுமத்­தி­வரும் நிலையில், நிக் கார்ட்டர் மீது பாடகி மெலிஸா குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

தற்­போது 34 வய­தான பாடகி, மெலிஸா சூமென், பெக் ஸ்ட்ரீட் போய்ஸ் இசைக்­கு­ழுவின் நிகழ்ச்­சி­க­ளிலும் பங்­கு­பற்­றி­யவர்.

அண்­மையில் அவர் எழு­திய வலைப்­ப­தி­வொன்றில், 18 வரு­டங்­க­ளுக்கு முன்னர் பாட­கரும் நடி­க­ரு­மான நிக் கார்ட்டர் தன்னை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­டு­ப­டுத்­தி­ய­தாக தெரி­வித்­துள்ளார்.

அப்­போது ட்ரீம் எனும் மகளிர் இசைக்­கு­ழு­வொன்றின் அங்­கத்­த­வ­ராக இருந்தார். தொலைக்­காட்சி படப்­பி­டிப்­பொன்­றுக்­காக நிக் கார்ட்­டரின் வீட்­டுக்குத் தான் அழைக்­கப்­பட்­ட­தா­கவும் அங்­கு­வைத்து தன்னை நிக் கார்ட்டர் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­ய­தா­கவும் மெலிஸா தெரி­வித்­துள்ளார்.

தற்­போது 37 வய­தான நிக் கார்ட்டர் இது குறித்து கூறு­கையில், மெலிஸா சூமெனின் குற்­றச்­சாட்­டினால் தான் பெரும் அதிர்ச்­சியும் கவ­லையும் அடைந்­தாக தெரி­வித்­துள்ளார்.

‘அந்­ந­ட­வ­டிக்கை பரஸ்­பர சம்­ம­தத்­துடன் நடைபெறவில்லை என நாம் ஒன்றாக இருந்தபோதோ அல்லது வேறு சந்தர்ப் பத்திலோ ஒருபோதும் மெலிஸா தெரிவித்திருக்க வில்லை’ என நிக் கார்ட்டர் கூறியுள்ளார்.

(Visited 67 times, 1 visits today)

Post Author: metro