ஜஸ்டிஸ் லீக்கை முந்திய கோகோ

டிஸ்னி – பிக்ஸார் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த அனிமேஷன் படமான கோகோ அண்மையில் வெளியான ஜஸ்டிஸ் லீக் திரைப்படத்தை முந்தி வசூலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

வோல்ட் டிஸ்னி மற்றும் பிக்ஸார் அனிமேஷன் ஆகியன நிறுவனங்கள் இணை தயாரிப்பில் வெளியாகியிருக்கும் முப்பரிமாண (3டி) அனிமேஷன் படம் கோகோ.

அமெரிக்காவில் கடந்த 22 ஆம் திகதி இப்படம் ெவளியானது. அதிக நேர்மறை விமர்சனங்களுடன், பெரியவர்கள் குழந்தைகள் என அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை கோகோ பெற்றது. அதனால் முதல் நாளிலிருந்தே படம் வசூல் மழை பொழிய ஆரம்பித்தது.

புதன் கிழமை தொடங்கி ஞாயிறு வரை 71.2 மில்லியன் டொலர்களை வசுலித்தது. வெள்ளி, சனி, ஞாயிறு என வார இறுதி மூன்று நாட்களில் மாத்திரம் 50.8 மில்லியன் டொலர்களை வசூலித்தது.

சர்வதேச அளவில் ஏற்கனவே மெக்ஸிகோவில் வெளியாகி, அங்கு அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை கோகோ படைத்துவிட்டது. மேலும் சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் கடந்த வாரம் வெளியானது.

 

தற்போது இதன் வட அமெரிக்க வசூல் 82.3 மில்லியன் (8.23 கோடி) டொலர்களாகும். மொத்த வசுல் 160 மில்லியன் (16 கோடி) டொலர்களாகும்.

கடந்த 17 ஆம் திகதி வெளியான ஜஸ்டிஸ் லீக் திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இரண்டாவது வார இறுதியில் 40.7 மில்லியன் டொலர்களை ஜஸ்டிஸ் லீக் வசூலித்தது. தற்போது இதன் ஒட்டுமொத்த வசுல் 488 மில்லியன் டொலர்களாகும்.

(Visited 37 times, 1 visits today)

Post Author: metro