அழகுக்கலை நிபுணர் மீது 14 தடவைகள் துப்பாக்கிப் பிரயோகங்கள் தப்பிப்பதற்கு மாமியாரிடம் தஞ்சமடைய முனைந்த போது சுட்டுக்கொலை – மனில் பண்டாரவின் பாதாள உலகக் குழுவினரைத் தேடி பொலிஸார் வேட்டை

(ரெ.கிறிஷ்­ணகாந்)

கொட்­டாவ, ருக்­மலே பிர­தே­சத்தில் அழ­குக்­கலை நிபு­ண­ராகப் பணி­யாற்­றிய பெண் ஒருவர், பாதாள உல­கக்­கு­ழு­வி­னரால் தொடர்ச்­சி­யாக 14 துப்­பாக்கிப் பிர­யோ­கங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.

இரண்டு பாதாளக் குழுக்­க­ளுக்­கி­டை­யி­லான சம்­ப­வ­மொன்றின் தலை­யீட்டின் கார­ண­மாக விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டு, பிணையில் வந்­தி­ருந்­த­போது இப்பெண் கொல்லப்பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. இந்தச் சம்­பவம் கடந்த வியா­ழக்­கி­ழமை இரவு இடம்­பெற்­றுள்­ளது.

உயி­ரிழந்த மஞ்­சுளா சந்­துனி அபே­விக்­ரம என்ற 41 வய­தான இப்­பெண்­ணினால் அத்­து­ரு­கி­ரிய சந்­தியில் நடத்­தப்­பட்டு வந்த அழ­குக்­கலை நிலையம் ஒன்­றுக்கு கடந்த ஜன­வரி 17 ஆம் திக­தி­யன்று தனது நீண்ட கூந்­தலை அழ­குப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக சென்­றி­ருந்த மனில் பண்­டார என்ற பாதாளக் குழு உறுப்­பினர், அழ­குக்­கலை நிலை­யத்தில் சேவையை பெற்றுக் கொண்­டி­ருந்த போது சுட்டுக் கொல்­லப்­பட்டார்.

மனில் பண்­டா­ரவைக் கொலை செய்­வ­தற்­காக துப்­பாக்­கி­தா­ரி­க­ளுக்கு ஒத்­தா­சை­ய­ளித்தக் குற்­றச்­சாட்டில் அழ­குக்­கலை நிபுணர் மஞ்­சுளா பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு, நீதி­மன்ற உத்­த­ரவின் பேரில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டார்.

எனினும், அதன் பின்னர் அவர் பிணையில் விடு­த­லை­யா­கி­யி­ருந்த போதிலும் மேற்­படி கொலைக்கு ஒத்­தாசை வழங்­கி­ய­தாக கருதி மனில் பண்­டா­ரவின் குழு­வினர் அவ­ருக்கு கொலை மிரட்டல் விடுத்­துள்­ளனர்.

அதனால் அவர்­க­ளி­ட­மி­ருந்து தன்னைக் காப்­பாற்றிக் கொள்­ளுவ­தற்­காக மஞ்­சுளா கடந்த ஆறு மாதங்­க­ளாக அவர்­க­ளது கண்­களில் படாமல் தலை­ம­றை­வாக இருந்து வந்­துள்ளார்.

இது இவ்­வா­றி­ருக்­கையில், கடு­வலை நீதிவான் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு உட்­பட்­டு­வந்த பணப் பிரச்­சினை தொடர்­பான இரு வழக்­கு­களில் ஆஜ­ரா­வ­தற்­காக சம்­பவ தின­மான கடந்த வியா­ழக்­கி­ழமை செப்­டெம்பர் 30 ஆம் திகதி, மஞ்­சுளா நீதி­மன்­றுக்கு வரு­கை­தந்தார்.

அதன்­போது, அவ­ருக்கு எதி­ராக குறித்த இரு வழக்­கு­க­ளி­லு­மி­ருந்து நீதி­மன்­றினால் விடு­தலை செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து அன்­றைய தினம் தனது பிள்ளை மற்றும் கணவன் ஆகியோர் வசித்­து­வரும் கொட்­டா­வை­யி­லுள்ள இல்­லத்­துக்கு சென்­றுள்ளார்.

நீண்ட நாட்­க­ளுக்குப் பின்னர் தனது உற­வி­னர்­க­ளுடன் அவர் ஒரு­புறம் மகிழ்ச்­சியில் இருக்க, மறு­புறம் தலை­ம­றை­வா­கி­யி­ருந்த மஞ்­சுளா வெளி­வந்த விடயம் மனில் பண்­டா­ரவின் குழு­வி­ன­ருக்கு தெரிய வந்­தி­ருக்­கலாம் என்று பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இத­னை­ய­டுத்து, மனில் பண்­டா­ரவின் குழு­வினர் என சந்­தே­கிக்­கப்­படும் துப்­பாக்­கி­தா­ரிகள் இருவர் அன்­றைய தினம் முகத்தை முழு­மை­யாக மறைத்­த­வாறு மோட்டார் சைக்­கிளில் கொட்­டாவ, ருக்­ம­லே­வி­லுள்ள மஞ்­சு­ளாவின் கண­வரின் வீட்­டுக்குச் சென்­றுள்­ளனர்.

இனந்­தெ­ரி­யாத துப்­பாக்­கி­தா­ரிகள் இரு­வரும் இரவு 8. 45 மணி­ய­ளவில் மஞ்­சு­ளாவின் மீது சர­மா­ரி­யாக துப்­பாக்கி பிர­யோகம் நடத்­தி­யுள்ள நிலையில், துப்­பாக்­கி­தா­ரி­களின் வேட்­டி­லி­ருந்து தப்­பிப்­ப­தற்­காக அவர் தனது மாமி­யா­ரிடம் சென்று தஞ்சம் புக முயற்­சித்த போது, மஞ்­சுளா மீது துப்­பாக்கி பிர­யோகம் நடத்­தி­விட்டு சந்­தேக நபர்கள் தப்பிச் சென்­றுள்­ள­தாக விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ளது.

சம்­பவம் இடம்­பெற்ற வேளையில், உயி­ரி­ழந்தப் பெண்ணின் கணவர், பிள்ளை மற்றும் மாமியார் ஆகியோர் அவ்­வீட்டில் இருந்­துள்ள நிலையில் சம்­பவ இடத்­துக்கு விரைந்த கொட்­டாவ பொலிஸார் அவர்­க­ளிடம் வாக்­கு­மூ­லங்­களைப் பதிவு செய்­துள்­ளனர்.

 

உயி­ரி­ழந்த மஞ்­சு­ளாவின் மீது துப்­பாக்­கி­தா­ரிகள் 14 துப்­பாக்கிப் பிர­யோ­கங்­களை நடத்­தி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

மனில் பண்­டா­ரவின் குழு­வினர் என சந்­தே­கிக்­கப்­படும் பாதாள உல­கக்­கு­ழு­வி­னரே இக்­கொ­லைக்­கான கார­ண­மாக இருக்­கலாம் என சந்­தே­கிக்கும் கொட்­டாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரு கின்றனர்.

(Visited 162 times, 1 visits today)

Post Author: metro