சோபன்பாபுவை திருமணம் செய்யாதது ஏன்? ஜெயலலிதாவின் கடிதமும் பேட்டியும்

சோபன்பாபு­வுடன் 7 ஆண்­டுகள் வாழ்ந்­ததை ஏன் மறைக்க வேண்டும் என தமி­ழ­கத்தின் மறைந்த முதல்வர் ஜெய­ல­லி­தாவே பல வருடங்களுக்கு முன் மும்­பையைச் சேர்ந்த ஸ்டார் அண்ட் ஸ்டைல் இதழுக்கு கடி­த­மாக அனுப்­பி­யுள்ளார்.

1980ஆம் ஆண்டு நடிகர் சோபன்பாபு- ஜெய­ல­லி­தாவை இணைத்து மும்­பையில் இருந்து வெளி­யான ‘ஸ்டார் அண்ட் ஸ்டைல்’ ஏடு ஒரு கட்­டுரை வெளி­யிட்­டி­ருந்­தது.

இதற்கு பதி­ல­ளித்து ஜெய­ல­லிதா ஒரு கடிதம் அனுப்­பி­யி­ருந்தார். ஜெய­ல­லிதா அனுப்­பிய கடி­தத்தை குமுதம் வார இதழ் 1980இல் மொழி­ பெ­யர்த்து வெளி­யிட்­டது. இதை பின்­னாளில் தி.மு­.க.வின் முர­சொலி நாளேடும் பதிவு செய்­தி­ருந்­தது.

ஸ்டார் அண்ட் ஸ்டைல் இதழுக்கு ஜெய­ல­லிதா எழு­திய கடிதம்; அன்பு­டையீர், உங்கள் நிருபர் நன்­றாக குழம்பி இருக்­கிறார் என்றே நினைக்­கிறேன். ஆர்.ஜெயராம் என்­பது கால­மா­கி­விட்ட என் தந்­தையின் பெயர். சாதா­ர­ண­மாக கடிதப் போக்­கு­வ­ரத்து அத்­த­னை­யிலும் நான் (மிஸ்) ஜெய­ல­லிதா ஜெயராம் என்றே கையெ­ழுத்­தி­டு­வது வழக்கம்.

நான் ஜெய­ராமின் மகள் என்­பதை உங்கள் நிருபர் நான் படித்த பிரஸ்ன்­டேஷன் ெகான்வென்ட், சர்ச் பார்க் பள்ளி ரிஜிஸ்­தரை பார்த்து தெளி­வ­டை­யலாம். குமாரி ஜெய­ல­லிதா போதாது என்றால் தமிழ்­நாடு கிரிக்கெட் அஸோ­ஸி­யே­ஷனில் குமாரி ஜெய­ல­லிதா ஜெயராம் என்ற பெரு­மை­யுடன் நான் மெம்­ப­ராகி உள்­ள­தையும் பதிவுப் புத்­த­கங்­களில் இருந்து அறிந்து கொள்­ளலாம்.

திரு.ஷோபன்பாபு­வுடன் நான் கடந்த 7 ஆண்­டு­க­ளாக ‘கோயிங் ஸ்டெடி’. அவர் ஒரு நேர்­மை­யான, பண்­பான மனிதர் என்­பதைப் பெரு­மை­யுடன் உணர்­வதால் இந்த நட்பு என் ஆயுள் உள்­ள­வரை நீடிக்க வேண்டும் என்­பதே என் விருப்பம். மறைக்­கவும் விரும்ப­வில்லை அவ­ருக்கு ஏற்கெ­னவே மண­மாகி இருப்­பதால் என்னைத் தற்­ச­மயம் மணக்க இய­லாது இருக்­கிறார்.

ஆகவே, என் மிஞ்­சிய வாழ்­நாளை மிஸ் ஜெய­ல­லிதா ஜெயராம் என்று இருப்­ப­தென முடிவு செய்­தி­ருக்­கிறேன். ஷோபன்பாபுவின் நட்பை நான் என்­றுமே மூடி மறைத்­தது கிடை­யாது. தென் இந்­திய திரை உலகு சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் இதை நன்கு அறிவர். நடிகை என்ற இமே­ஜையோ மீண்டும் திரை உலகில் பிர­வேசம் செய்­வ­தையோ குறித்து அலட்டிக் கொள்­ளாத காரணத்தால் மிகுந்த பிர­யத்­த­னப்­பட்டு எதையும் மக்­க­ளிடம் இருந்து மறைக்கும் நிலைமை எனக்கு இல்லை.

அன்­புடன்!
ஜெய­ல­லிதா ஜெயராம் குமுதம்-1980 .
இவ்­வாறு ஜெய­ல­லிதா எழு­தி­யி­ருந்தார்.

மேலும், சோபன்பாபுவை தம்மால் திரு­மணம் செய்­யாமல் போனது ஏன் என்­பது தொடர்­பாக குமுதம் வார இத­ழுக்கு ஜெய­ல­லிதா அளித்­தி­ருந்த பேட்­டியில் விபரித்­தி­ருக்­கிறார்.

1980 ஆம் ஆண்டு குமுதம் இத­ழுக்கு ஜெய­ல­லிதா அளித்த பேட்­டியில் கூறி­யி­ருந்­த­தா­வது: கேள்வி: ஏற்­கெ­னவே திரு­ம­ண­மான ஒரு­வ­ருடன் வாழ்க்கை நடத்­து­வது தவ­றில்லை என்­பது உங்கள் அபிப்பி­ரா­யமா?

பதில்: ஒவ்­வொ­ரு­வ­ரு­டைய தனிப்­பட்ட சந்­தர்ப்ப சூழ்­நி­லை­களை ஆராய்ந்து பார்த்­த­பின்தான் இந்தப் பொது­வான கேள்­விக்கு பதில் அளிக்க முடியும். ஆனால், எந்த கன்னிப் பெண்ணும் வேண்டும் என்று திட்­ட­மிட்டு ஏற்கெ­னவே திரு­ம­ண­மான ஒரு­வரை காத­லிப்­பதில்லை. எந்தப் பெண்­ணுமே தனக்­கென்று ஒருவர் இருக்க வேண்டும். அவர் தனக்கே சொந்­த­மாக இருக்க வேண்டும் என்­று தான் விரும்புவாள்.

நானும் அப்­ப­டித்தான் முதலில் கன­வுகள் கண்டேன். ஆனால், எதிர்­பா­ராத வித­மாக ஷோபன்பாபுவைச் சந்­தித்­த­வுடன் என் மனம் அவர் மீதே பற்றுக் கொண்­டு­ விட்­டது. தெரிந்து செய்த காரி­ய­மல்ல இது. அவரை முதலில் சந்­தித்த போது அவ­ருக்கு ஏற்கெ­னவே திரு­மணம் ஆகி­யி­ருந்­தது.

அது அவ­ரு­டைய தவறும் அல்ல. என்­னு­டைய தவறும் அல்ல. அவர் மனை­வியை விவ­கா­ரத்து செய்து என்னை ஏன் திரு­மணம் செய்து கொள்­ள­வில்லை? எத்­த­னையோ பேர் அப்­படிச் செய்­ய­வில்­லையா? என கேட்­கலாம். ஆனால், நாங்கள் இரு­வரும் அப்­படிச் செய்ய விரும்­ப­வில்லை.

அவ­ரு­டைய மனைவி எந்த குற்­றமும் செய்­ய­வில்லை. அவர் எதற்­காக நிரா­க­ரிக்­கப்பட வேண்டும்-? தவிர, அவர் மனைவியின் உடல்நிலையும் சரியில்லை. ஆரோக்கியம் இல்லை.

  என்னை ஷோபன்பாபு சந்திக்கும் முன்பே அவர் மனைவியின் ஆரோக்கியம் சீர் குலைந்திருந்தது. அப் படி இருக்க அவருக்கு மேலும் அதிர்ச்சியைத் தருவது நியாயமாகாது என்று எண்ணினோம்”. இவ்வாறு ஜெய லலிதா பேட்டியளித்திருந்தார்.

(Visited 48 times, 1 visits today)

Post Author: metro