மூன்று மைல்­கற்­களை எட்­டினார் விராத் கோஹ்லி

இலங்­கைக்கு எதி­ராக டெல்லி பெரோஸ் கோட்லா விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­று­வரும் மூன்­றா­வதும் கடை­சி­யு­மான டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் விராத் கோஹ்லி மூன்று மைல்­கற்­களை எட்டி பாராட்­டு­தல்­களைப் பெற்றார்.

அவ­ரது இரட்டைச் சதம், முரளி விஜய்யின் சதம், ரோஹித் ஷர்­மாவின் அரைச் சதம் ஆகி­ய­வற்றின் உத­வி­யுடன் இந்­தியா அதன் முதல் இன்­னிங்ஸை 7 விக்கெட் இழப்­புக்கு 536 ஓட்­டங்­க­ளுடன் நிறுத்­திக்­கொண்­டது.
போட்­டியின் இரண்டாம் நாளான நேற்­றைய ஆட்­ட­நேர முடிவில் இலங்கை அதன் முதல் இன்­னிங்ஸில் 3 விக்­கெட்­களை இழந்து 131 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­தது.

கோஹ்லி மைல்­கற்கள்
இப் போட்­டியில் சதம் குவித்த விராத் கோஹ்லி, மூன்று போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஒன்றில் 3 சதங்கள் குவித்த முத­லா­வது அணித் தலைவர் என்ற பெரு­மையைப் பெற்­ற­துடன், 6 இரட்டைச் சதங்­களைக் குவித்த முத­லா­வது அணித் தலைவர் என்ற மற்­றொரு மைல்­கல்­லையும் எட்­டினார். இதற்கு முன்னர் அணித் தலை­வ­ராக பிறையன் லாரா 5 இரட்டைச் சதங்­களைக் குவித்­தி­ருந்தார். இதன் மூலம் லாராவின் சாத­னையை விராத் கோஹ்லி முறி­ய­டித்­துள்ளார்.

அது மட்­டு­மல்­லாமல் போட்­டியின் ஆரம்ப நாளான சனிக்­கி­ழ­மை­ கோஹ்லி 125 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­த­போது 5,000 டெஸ்ட் ஓட்­டங்­களைப் பூர்த்தி செய்­த­துடன் இந்த மைல்­கல்லை எட்­டிய 11ஆவது இந்­தி­ய­ரானார்.
தனது 63ஆவது டெஸ்ட் போட்­டியில் விளை­யாடும் விராத் கோஹ்லி இது­வரை 20 சதங்­களைப் பெற்­றுள்ளார்.
ஆரம்ப வீரர் முரளி விஜய் தனது மீள் வரு­கையில் அடுத்­த­டுத்த டெஸ்ட்­களில் சதங்­களைக் குவித்து அசத்­தி­யுள்ளார்.

இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்த இந்­தியா 78 ஓட்­டங்கள் பெற்­றி­ருந்­த­போது 2ஆவது விக்­கெட்டை இழந்­தது. இது இலங்­கை­ய­ருக்கு பெரும் மகிழ்ச்­சியைக் கொடுத்­தது.

ஆனால் அதன் பின்னர் ஜோடி சேர்ந்த முரளி விஜய்யும் விராத் கோஹ்­லியும் இலங்கை பந்­து­வீச்­சா­ளர்­களைப் பதம் பார்த்து 3ஆவது விக்­கெட்டில் பெறு­ம­தி­வாய்ந்த 273 ஓட்­டங்­களைப் பகிர்ந்­தனர். முரளி விஜய் (155 ஓட்­டங்கள்) தனது 53ஆவது டெஸ்டில் 11ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார்.

போட்­டியின் இரண்டாம் நாளான நேற்­றைய தினம் தனது முத­லா­வது இன்­னிங்ஸை 4 விக்கெட் இழப்­புக்கு 371 ஓட்­டங்­க­ளி­லி­ருந்து தொடர்ந்த இந்­தியா, தேநீர் இடை­வே­ளைக்கு சற்று முன்னர் 7 விக்கெட் இழப்­புக்கு (விராத் கோஹ்­லியின் ஆட்­ட­மி­ழப்­புடன்) 536 ஓட்­டங்­க­ளுடன் இன்­னிங்ஸை நிறுத்­திக்­கொண்­டது. கோஹ்லி 25 பவுண்ட்­றி­க­ளுடன் 243 ஓட்­டங்­களைக் குவித்தார். இத­னி­டையே ரோஹித் ஷர்மா 65 ஓட்­டங்­களைப் பெற்றார். இவர்கள் இரு­வரும் 5ஆவது விக்­கெட்டில் 135 ஓட்­டங்­களைப் பகிர்ந்­தனர்.

உபா­தையால் நாடு திரும்­பிய ரங்­கன ஹேரத்­துக்குப் பதி­லாக அணியில் இணைக்­கப்­பட்ட சுழல்­பந்­து­வீச்­சாளர் லக்ஷான் சந்­தகேன் 167 ஓட்­டங்­க­ளுக்கு 4 விக்­கெட்­களை வீழ்த்­தினார்.

இலங்கை அணி பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டி­ய­போது ஆரம்ப வீர­ராக களம் இறங்­கிய டில்­ருவன் பெரேரா மிகுந்த பொறுப்­பு­ணர்­வுடன் துடுப்­பெ­டுத்­தாடி 42 ஓட்­டங்­களைப் பெற்றார். உபா­தைக்­குள்­ளான சதீர சம­ர­விக்­ர­ம­வுக்குப் பதி­லா­கவே டில்­ருவன் ஆரம்ப வீர­ராக களம் இறக்­கப்­பட்டார்.

இதே­வேளை மற்­றைய ஆரம்ப வீர­ரான திமுத் கரு­ணா­ரட்ன முதல் பந்­தி­லேயே ஓட்­ட­மின்றி வெளி­யே­றினார்.
அணிக்கு மீள­ழைக்­கப்­பட்ட தனஞ்­செய டி சில்­வாவும் ஒரு ஓட்­டத்­துடன் களம் விட்­ட­கன்றார்.

எனினும் டில்­ருவன் பெரே­ராவும் முன்னாள் அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்­யூஸும் மூன்­றா­வது விக்­கெட்டில் 61 ஓட்­டங்­களைப் பகிர்ந்து இலங்கை அணிக்கு சற்று ஆறு­தலைக் கொடுத்­தனர். தொடர்ந்து மெத்­யூஸும் சம­கால அணித் தலைவர் தினேஷ் சந்­தி­ மா லும் பிரிக்­கப்­ப­டாத நான்­கா­வது விக்­கெட்டில் 56 ஓட்­டங்­களைப் பகிர்ந்­துள்­ளனர்.

மெத்யூஸ் 57 ஓட்­டங்­க­ளு­டனும் தினேஷ் சந்திமால் 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.
இரண்டாவது இன்னிங்ஸில் தொடர்ந்து துடுப்பெடுத்தாடுவதைத் தவிர்ப்பதற்கு இலங்கைக்கு மேலும் 205 ஓட்டங்கள் தேவைப்படும் நிலையில் மெத்யூஸ், சந்திமால் ஆகியோர் முன்னே அணியை சிறந்த நிலைக்கு இட்டுச் செல்லும் பாரிய பொறுப்பு இருக்கிறது.

(Visited 23 times, 1 visits today)

Post Author: metro