தேர்தல்களில் பெண்களுக்கு 25 சத வீத பிரதிநிதித்துவ ஒதுக்கீடு பெருந்தோட்டத்துறை பெண்களும் உள்வாங்கப்பட வேண்டும்! – ஊவா மாகாண சபை உறுப்பினர் எம். சச்சிதானந்தன்

(எம். செல்­வ­ராஜா)

தேர்­தல்­களில் பெண்­க­ளுக்கு 25 சத வீத பிர­தி­நி­தித்­துவ ஒதுக்­கீடு விட­யத்தில், மலை­யகப் பெருந்­தோட்­டத்­துறை சார் பெண்­களும் உள்­வாங்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்று ஊவா மாகாண சபை உறுப்­பினர் எம். சச்­சி­
தா­னந்தன் தெரி­வித்தார்.

ஊவா மாகாண சபை கட்­டிடத் தொகு­தியில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றில், ஊவா மாகாண சபை உறுப்­பினர் எம். சச்­சி­தா­னந்தன் கலந்து கொண்டு பேசு­கை­யி­லேயே, அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அவர் தொடர்ந்து பேசு­கையில், தேர்­தல்கள் எது­வென்­றாலும் அத்­தேர்­தல்­களில் பெண்­க­ளுக்கு 25 சத­வீத பிர­தி­நி­தித்­துவ ஒதுக்­கீ­டுகள் வழங்­கப்­படல் வேண்டும்.

அந்த ஒதுக்­கீடு பெரும்­பான்­மை­யின பெண்­க­ளுக்கு மட்டும் மட்­டுப்­ப­டுத்­தப்­படக் கூடாது. மலையக் பெருந்­தோட்­டத்­து­றைசார் பெண்­களும் 25 சத­வீத ஒதுக்­கீட்டில் உள்­வாங்­கப்­படல் வேண்டும். அத்­துடன், அவர்­களை வெற்றி பெறச் செய்யும் ஆக்­க­பூர்வ நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­படல் வேண்டும்.

இது விட­யத்தை, எமது கட்­சியின் செய­லாளர் கபீர் ஹாசீ­மி­டமும் உத்­தி­யோ­கப்­பூர்­வ­மாக வலி­யு­றுத்­தி­யுள்ளேன்.
மலையக பெருந்­தோட்­டத்­துறை சார் பெண்கள், நூற்­றுக்கு ஐம்­பத்­தேழு சத­வீ­த­முள்­ளனர். இவர்­களில் பெரும்­பா­லானோர் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளா­கவும், ஆசி­ரி­யை­க­ளா­கவும், ஏனைய துறை­க­ளிலும் தொழில் செய்து வரு­கின்­றனர்.

இவர்கள் நாட்­டுக்கு பாரிய பங்­க­ளிப்­பு­களை வழங்கிக் கொண்­டி­ருக்­கின்­றனர். தோட்­டங்­களில் பெண் தொழி­லா­ளர்­களால், இந்­நாட்­டுக்கு பெரு­ம­ள­வி­லான அந்நிய செலாவணியும் ஏற்கனவே கிடைத்து வந்துள்ளது. தற்போதும், அவர்களினால் இந்நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பு கிடைக்கிறது என்றும் தெரிவித்தார்.

(Visited 17 times, 1 visits today)

Post Author: metro