பாலி­யல் தொழி­லா­ளி­யாக சதா

அப்துல் மஜீத் இயக்­கத்தில் சதாவின் மாறு­பட்ட தோற்­றத்தில் உரு­வாகும் ‘டார்ச்லைட்’ படத்தின் பெர்ஸ்ட் லுக் சமீ­பத்தில் வெளி­யி­டப்­பட்­டது.

விஜய், பிரி­யங்கா சோப்ரா நடிப்பில் உரு­வான ‘தமிழன்’ படத்தை இயக்­கி­யவர் அப்துல் மஜீத். அதற்குப் பிறகு ‘கி.மு’, ‘துணிச்சல்’, ‘பைசா’, ‘தலகால் புரி­யல’ ஆகிய படங்­களை இயக்­கினார். தற்­போது சதா நடிப்பில் உரு­வாகும் ‘டார்ச்லைட்’ படத்தை இயக்கி வரு­கிறார். இதில் ரித்­விகா, இயக்­குநர் ஏ.வெங்­கடேஷ் ஆகியோர் முக்­கியக் கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்­கின்­றனர்.

இந்­நி­லையில் ‘டார்ச்லைட்’ படத்தின் பெர்ஸ்ட் லுக் சமீ­பத்தில் வெளி­யி­டப்­பட்­டது. இதில் பாலியல் தொழி­லாளி தோற்­றத்தில் சதா இருப்­பது தமிழ் சினி­மாவில் பேசு­பொருள் ஆகி­யி­ருக்­கி­றது.

‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழ் சினி­மாவின் நம்­பிக்கை வர­வாக பார்க்­கப்­பட்­டவர் சதா. ‘அந்­நியன்’, ‘திருப்­பதி’, ‘உன்­னாலே உன்­னாலே’ ஆகிய படங்­களின் மூலம் பர­வ­லான கவ­னத்தைப் பெற்றார்.

அதற்குப் பிறகு சரி­யான வாய்ப்­புகள் அமை­யா­ததால் தெலுங்கு, மலை­யாளம், கன்­னடம், இந்தி மொழிப் படங்­களில் நடித்து வந்தார். வடி­வேலு நாய­க­னாக நடித்த ‘எலி’ படத்தில் அவ­ருக்கு ஜோடி­யாக சதா நடித்தார்.

தற்­போது ‘டார்ச்லைட்’ படத்தில் பாலியல் தொழி­லா­ளி­யாக சதா நடித்து வரு­கிறார். இப்­ப­டத்தின் மூலம் மீண்டும் அதிக படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெறும் நம்பிக்கையில் சதா இருப்பதாகத் தெரிகிறது.

(Visited 145 times, 1 visits today)

Post Author: metro