லிந்துலை லோகி தோட்டக் காணியில் தனியார் கடை: எதிர்ப்புத் தெரிவித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

(க.கிஷாந்தன், நோர்ட்டன் பிரிட்ஜ் நிருபர், தலவாக்கலை கேதீஸ்)

லிந்­துலை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட லோகி தோட்டத் தொழி­லா­ளர்கள் தல­வாக்­கலை _- நுவ­ரெ­லியா பிர­தான வீதியில் லோகி தோட்­டத்­துக்கு அண்­மித்த பகு­தியில் இன்­று ஆர்ப்­பாட்டம் ஒன்றில் ஈடு­பட்­டுள்­ளனர்.
நபர் ஒருவர் லோகி தோட்­டத்­துக்குச் சொந்­த­மான காணியை ஆக்­கி­ர­மித்து கடை ஒன்றை அமைத்­துள்­ள­தாக குற்­றஞ்­சாட்­டியே இந்த ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

இவ்­வாறு அமைக்­கப்­பட்ட கடையில் மரக்­க­றிகள் விற்­பனை செய்­வ­தற்கு வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபையின் தற்­கா­லி­க­மாக அனு­ம­தியை இவர் பெற்­றி­ருந்­துள்ள போதிலும் லோகி தோட்ட நிர்­வா­கத்­துக்குச் சொந்­த­மான இந்த இடத்தை லோகி தோட்ட நிர்­வாகம் மீண்டும் பொறுப்­பேற்க வேண்டும் என கோரியும் இவர்கள் ஆர்ப்­பாட்டம் செய்­தனர்.

ஆர்ப்­பாட்­டத்தின் போது பல்­வேறு வாச­கங்கள் கொண்ட பதா­தை­களை ஏந்­தி­ய­வண்ணம் கோஷங்­களை எழுப்பி வீதியின் ஓரத்தில் கீழே அமர்ந்து சுமார் 3 மணித்தியாலயங்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

(Visited 23 times, 1 visits today)

Post Author: metro