கிழக்கு முன்னாள் முத­ல­மைச்சர் ஹாபிஸ் நஸீரும், அலி சாஹீர் எம்.பியும் முறுகல்; சமா­தா­னப்­ப­டுத்தும் முயற்சி தோல்வி: கூட்­டத்தை விட்டு வெளி­யே­றிய அலி சாஹீர்!- முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் முன்­னி­லையில் பாசிக்­குடா ஹோட்­டலில் சம்­பவம்

(காங்­கே­ய­னோடை நிருபர்)

மட்­டக்­க­ளப்பு, பாசிக்­குடா ஹோட்­டலில் வைத்து மட்­டக்­க­ளப்பு மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சாஹீர் மௌலானா மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் ஆகி­யோ­ருக்­கி­டையில் பலத்த வாக்­கு­வாதம் இடம்­பெற்­றுள்­ள­தாக தெரிய வரு­கி­றது.

இந்த வாக்­கு­வாதம் கைக­லப்­பாக மாறும் நிலை ஏற்­பட்ட போது அங்­கி­ருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும், அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் இரு­வ­ரையும் சமா­தா­னப் ­ப­டுத்­தி­ய­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

இது தொடர்­பாக தெரிய வரு­வ­தா­வது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை ­வரும் அமைச்­ச­ரு­மானரவூப் ஹக்கீம், எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சேர்ந்து போட்­டி­யி­டு­வதா அல்­லது தனித்து போட்­டி­யி­டு­வதா என முஸ்லிம் காங்­கி­ரஸின் கிழக்கு மாகாண முக்­கி­யஸ்­தர்­களின் கருத்­து­களை பெற்றுக் கொள்­வ­தற்­காக நேற்று பாசிக்­குடா ஹோட்­டலில் தங்­கி­யுள்ளார்.

இந்த நிலையில் நேற்றுக் காலை முன்னாள் முத­ல­மைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சாஹீர் மௌலானா ஆகியோர் அமைச்சர் ரவூப் ஹக்­கீமைச் சந்­தித்­துள்­ளனர்.

இதன் போது ஏறாவூர் நகர சபை தேர்தல், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் வேட்­பா­ளர்கள், ஏறாவூர் அர­சியல் தொடர்­பிலும் கலந்­து­ரை­யாடிக் கொண்­டி­ருந்த போது மட்­டக்­க­ளப்பு மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பினர் அலி­சாஹீர் மௌலான மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் ஆகி­யோ­ருக்­கி­டையில் பலத்த வாக்­கு­வாதம் இடம்­பெற்று, அது கைக­லப்­பாக மாறும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து வெளியில் நின்ற அமைச்சர் ஹக்­கீமின் மெய்ப்­பா­து­கா­வ­லர்கள், ஹோட்டல் ஊழி­யர்கள் மற்றும் வெளியில் நின்ற சிலரும் அறைக்குள் சென்­றுள்­ளனர்.

பின்னர் அமைச்சர் ஹக்கீம் இரு­வ­ரையும் சம­ரசம் செய்ய முயற்சித்த போதிலும் கூட அவரால் முடியவில்லை என தெரிய வருகின்றது. எனினும் அங்கிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மௌலானா வெளி யேறியதாகவும் தெரிய வருகின்றது.

(Visited 188 times, 1 visits today)

Post Author: metro