நீர்கொழும்பிலிருந்து படகில் கடலுக்குச் சென்ற நான்கு மீனவர்களைக் காணவில்லை! 16 ஆம் திகதி சென்ற இவர்களுடனான தொடர்பு 29 ஆம் திகதியுடன் முற்றாக துண்டிப்பு!

(நீர்­கொ­ழும்பு நிருபர்)

நீர்­கொ­ழும்­பி­லி­ருந்து படகில் கட­லுக்குச் சென்ற மீன­வர்கள் நான்கு பேர் கடந்த 29 ஆம் திகதி ஆள் கடலில் படகு விபத்­துக்­குள்­ளாகி காணாமல் போயுள்­ள­தாக தெரிய வரு­கி­றது. ‘செனுரி துவ – தருசி புதா’ என்ற பெயர் கொண்ட படகில் சென்ற மீன­வர்கள் நால்­வரே காணாமல் போயுள்­ளனர்.

 

கடந்த மாதம் 16 ஆம் திகதி நீர்­கொ­ழும்­பி­லி­ருந்து ‘செனுரி துவ – தருசி புதா’ என்ற படகில் காணாமல் போயுள்ள மீன­வர்கள் தொழி­லுக்கு சென்­றுள்­ளனர்.

கடந்த 29 ஆம் திகதி முதல் பட­குடன் இருந்த தொடர்பு நிறுத்­தப்­பட்­ட­தாகம் துங்­கல்­பிட்­டிய பொலிஸ் நிலை­ யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

கடற்­கரை வீதியைச் சேர்ந்த ஸ்டென்லி ரொட்­ரிகோ (படகு செலுத்­துநர்), குடா­ப்பா­டு பிர­தே­சத்தைச் சேர்ந்த நெல்சன் ரொட்­றிகோ, அஜித் குமார மற்றும் பல­கத்­துறை பிர­தே­சத்தைச் சேர்ந்த லக்மால் ரொட்றிகோ ஆகியோரே இந்தப் படகில் சென்றவர்களாவர்.

(Visited 48 times, 1 visits today)

Post Author: metro