பிற்போடப்பட்ட போட்டிகள் இன்றும் நாளையும்; கலம்போ எவ்.சி., விமானப்படை மோதுகின்றன

(நெவில் அன்­தனி)

சீரற்ற கால­நிலை கார­ண­மாக பிற்­போ­டப்­பட்ட டயலொக் சம்­பியன்ஸ் லீக் கால்­பந்­தாட்­டத்தின் 14ஆம் கட்டப் போட்­டிகள் இன்றும் நாளையும் நடை­பெ­ற­வுள்­ளன.

இன்று நடை­பெ­ற­வுள்ள போட்­டி­களில் கலம்போ எவ்.சி.க்கும் விமா­னப்­ப­டைக்கும் இடை­யி­லான போட்டி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­த­வுள்­ளது. இப் போட்டி களனி மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.

அணிகள் நிலையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் கலம்போ எவ்.சி. சம்­பியன் பட்­டத்தை தக்­க­வைப்­ப­தற்­கான முயற்­சி­யாக இந்தப் போட்­டி­யிலும் வெற்­றி­பெற கடு­மை­யாக முயற்­சிக்­க­வுள்­ளது.

மறு­பு­றத்தில் அலட்­டிக்­கொள்­ளாமல் சிறிய கோல்கள் வித்­தி­யா­சத்தில் வெற்­றி­பெற்­று­வரும் விமா­னப்­படை அணி இந்தப் போட்­டியை இல­குவில் விட்­டுக்­கொ­டுக்கும் என்று எதிர்­பார்க்க முடி­யாது.

கலம்போ எவ்.சி.யின் விவே­கத்­துக்கும் விமா­னப்­ப­டையின் வேகத்­துக்கும் இடை­யி­லான போட்­டி­யாக இப் போட்டி அமை­வதால் கடை­சி­வரை விறு­வி­றுப்பை ஏற்­ப­டுத்தும் என்­பது உறுதி.

நியூ யங்­ஸுக்கு வாய்ப்பு அதிகம் கடந்த சில வரு­டங்­களை விட இவ் வருடம் சிறந்த பெறு­பே­று­களைப் பதிவு செய்­து­வரும் வென்­னப்­புவ நியூ யங்ஸ் கழகம் மற்­றொரு வெற்­றியை குறி வைத்து கடற்­படைக் கழ­கத்தை எதிர்த்­தா­ட­வுள்­ளது.

இப் போட்டி கடற்­ப­டை­யி­னரின் சொந்த மைதா­ன­மான வெலி­ச­றையில் நடை­பெ­று­வதால் நியூ யங்ஸ் கழ­கத்­திற்கு சவாலை எதிர்­கொள்ள நேரிடும்.

எனி­னும், இவ் வருடம் கடற்­படை அணி­யினர் பிர­கா­சிக்கத் தவ­றி­வ­ரு­வதால் இந்தப் போட்­டியில் நியூ யங்ஸ் கழ­கத்­திற்கு சாத­க­மான முடிவு கிட்ட வாய்ப்பு இருக்­கின்­றது.

மாத்­த­றையில் கம்­பளை க்றிஸ்டல் பெலஸ் அணியை எதிர்த்­தா­ட­வுள்ள மாத்­தறை சிட்டி மற்­றொரு வெற்­றியை ஈட்டும் என நம்­பப்­ப­டு­கின்­றது.

இங்கு வருகை தந்த சுவிட்­ஸர்­லாந்தின் எல்­லை­க­ளற்ற கால்­பந்­தாட்ட அணியை வெற்­றி­கொண்ட ஒரே ஒரு உள்ளூர் அணி­யான மாத்­தறை சிட்டி கழகம் இவ் வருடம் சிறப்­பாக விளை­யாடி வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

நாளைய போட்­டிகள்:

சொலிட் எதிர் இரா­ணுவம் (அநு­ரா­த­புரம்)

புளூ ஸ்டார் எதிர் நிகம்போ யூத் (களுத்துறை)

ஜாவா லேன் எதிர் சோண்டர்ஸ் (சிட்டி லீக்)

பெலிக்கன்ஸ் எதிர் அப்கன்ட்றி லயன்ஸ் (குருநாகல்)

மொரகஸ்முல்லை எதிர் பொலிஸ் (இராஜகிரிய)

(Visited 20 times, 1 visits today)

Post Author: metro