730,000 சிறார்களுக்கு செலுத்தப்பட்ட டெங்கு தடுப்பு மருந்து தொடர்­பாக பிலிப்பைன்ஸ் அரசு விசா­ரணை

பிலிப்­பைன்ஸில் 730, 000 சிறு­வர்­க­ளுக்கு ஏற்­றப்­பட்ட டெங்கு தடுப்பு மருந்­தினால் சுகா­தார பாதிப்­புகள் ஏற்­ப­டலாம் எனத் தெரிவிக்­கப்­ப­டு­வது தொடர்­பாக விசா­ரணை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

டெங்கு நோயினால் பாதிக்­கப்­ப­டா­த­வர்­க­ளுக்கு இதனால் பாதிப்பு ஏற்­ப­டலாம் என இந்தத் தடுப்பு மருந்­தினைத் தயா­ரிக்கும் பிரெஞ்ச் நிறு­வ­ன­மான சனோபி கடந்த வாரம் அறி­வித்­தது.

இதை­ய­டுத்து, இந்தத் தடுப்பு மருந்­தேற்றும் செயற்­திட்டம் கடந்த வெள்ளிக்­கி­ழமை முதல் இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது.

டெங்கு நோயினால் உலகம் முழு­வ­தி­லு­முள்ள 400 மில்­லி­ய­னுக்கும் மேற்­பட்ட மக்கள் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர்.

நுளம்­பினால் பரப்­பப்­படும் இந்த நோயினால் ஆசியா மற்றும் லத்தீன் அமெ­ரிக்கா நாடு­க­ளி­லுள்ள பலர் இறப்­ப­தாக உலக சுகா­தார நிறு­வனம் தெரி­விக்­கி­றது.

சனோபி நிறு­வ­னத்தின் தயா­ரிப்­பான டெங்க்­வெக்­ஸியா (Dengvaxia) என்ற இந்த தடுப்பு மருந்தே டெங்கு நோய்க்கு எதி­ராக கண்­டு­பி­டிக்­கப்­பட்ட முத­லா­வது தடுப்பு மருந்­தாகும்.

இந்தத் தடுப்பு மருந்து பிலிப்பைன்ஸ் தவிர ஆர்­ஜென்­டீனா, அவுஸ்­தி­ரே­லியா, பங்­க­ளாதேஷ், பொலீ­வியா, பிரேஸில், கம்­போ­டியா, கொஸ்டா ரிக்கா, எல் சல்­வடோர், கௌத­மாலா, ஹொன்­டூராஸ், இந்­தோ­னே­ஷியா, மலே­ஷியா, மெக்­ஸிக்கோ, பரா­குவே, பெரு, சிங்­கப்பூர், தாய்­லாந்து, வெனி­சூலா ஆகிய நாடு­கிளில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

பிலிப்­பைன்ஸில் தனது தடுப்பு மருந்­தினால் மரணம் ஏதும் நிகழ்ந்­த­தாக அறி­விக்­கப்­ப­ட­வில்லை என நிறு­வ­னத்தின் மருத்­துவப் பணிப்­பாளர் நேற்று ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் தெரி­வித்தார்.

தொடர்ந்து நிலை­மையைக் கண்­கா­ணித்து வரு­கிறோம். இதை உறுதி செய்­வ­தற்­காக சுகா­தார திணைக்­க­ளத்­துடன் இணைந்து செயல்­ப­டு­கிறோம் என ரூபி டிசோன் என்ற அந்த அதி­காரி தெரி­வித்தார்.

அர­சாங்கம் இது குறித்து விசா­ரணை செய்­வதால் மக்கள் கலக்­க­ம­டையத் தேவை­யில்லை என பிலிப்பைன்ஸ் ஜனா­தி­பதி மாளி­கையின் பேச்­சாளர் ஹெரி ரொக் தெரி­வித்­துள்ளார்.

உலகம் முழு­வ­தி­லு­முள்ள சுமார் அரை­வா­சிப்­பேரை டெங்கு நோய் தாக்­கி­யி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. டெங்­கினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு அன்றி அதனால் பாதிக்­கப்­ப­டா­த­வர்­க­ளுக்கே இந்தத் தடுப்பு மருந்து பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வ­தாக தற்­போது ஆய்­வொன்றில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

நோயாளிகளுக்கும் இந்தத் தடுப்பு மருந்­தினைக் கொடுக்கும் வைத்­தி­யர்­க­ளுக்கும் அது தொடர்­பான புதிய தக­வல்­களை வழங்­கு­மாறு சுகாதார அதிகாரிகளைக் கேட்டுக்கொள்வதாக குறித்த நிறு­வனம் மேலும் கூறியுள்ளது.

 

 

 

 

 

இதனடிப்படையில் முழுமையான விசாரணை நடத்தப்படும் வரை டெங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இந்தத் தடுப்பு மருந்து ஏற்றப்படவேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

 

தொடர்புடைய செய்தி

“டெங்க்­வெக்­ஸியா” டெங்கு தடுப்பு மருந்தை வாபஸ் பெறுமாறு சனோபி நிறுவனத்துக்கு பிலிப்பைன்ஸ் உத்தரவு

 

(Visited 37 times, 1 visits today)

Post Author: metro