நத்தார், புதுவருட பண்டிகைக் காலங்களில் தனியார் பஸ்களில் முறைகேடுகள் இடம்பெற்றால் 1955 க்கு உடன் அறிவிக்கவும்! – பயணிகளிடம் போக்குவரத்து ஆணைக்குழு வேண்டுகோள்

(மினு­வாங்­கொடை நிருபர்)

நத்தார் மற்றும் புது வருட பண்­டிகைக் காலங்­களில் தனியார் பஸ் வண்­டி­களில் முறை­கே­டுகள் ஏதும் இடம்­பெற்றால் அவை தொடர்­பாக உட­ன­டி­யாக அறி­விக்­கு­மாறு தேசிய போக்­கு­வ­ரத்து ஆணைக்­குழு பய­ணி­களை அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

அதிக கட்­டணம் வசூ­லிப்பு, மிகு­தியாக பய­ணி­களை ஏற்­றுதல், பஸ் பிர­யாணச் சீட்டு வழங்­காமை மற்றும் குறிப்­பிட்ட வீதி­களில் பய­ணிக்­காமல் இடை­ந­டுவில் போக்­கு­வ­ரத்துப் பாதையை மாற்­று­வது உள்­ளிட்ட முறை­கே­டுகள் தொடர்­பாக பய­ணிகள் போக்­கு­வ­ரத்து ஆணைக்­கு­ழு­வுக்கு அறி­விக்க முடியும் என்றும் கேட்­கப்­பட்­டுள்­ளது.

பய­ணிகள் குறித்த முறை­கே­டு­களை 1955 அல்­லது 011- 2333222 ஆகிய தொலை­பேசி இலக்­கங்­க­ளுக்கு தொடர்பை ஏற்­ப­டுத்தி முறைப்­பா­டு­களைத் தெரி­விக்க முடியும் என்றும் ஆணைக்­குழு குறிப்­பிட்­டுள்­ளது.

பண்­டிகைக் காலங்­களில் ஆணைக்­கு­ழு­வினால் ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்ள விசேட பஸ்­களில் இடம்­பெறும் குறித்த முறை­கே­டு­க­ளி­லி­ருந்து பய­ணி­களைப் பாது­காக்கும் நோக்கில் அவர்­க­ளுக்கு மிகச் சிறந்த பயண வச­தி­களை ஏற்­ப­டுத்திக் கொடுக்கும் முகமாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

(Visited 19 times, 1 visits today)

Post Author: metro