உலகக் கிண்ண கால்பந்தாட்ட குழுக்களில் கிட்டத்தட்ட சமபலம் கொண்ட நாடுகள்

சுமார் ஒன்­றரை வரு­டங்­க­ளுக்கு மேலாக நடத்­தப்­பட்ட தகு­திகாண் சுற்று முடிவில் 31 நாடுகள் பேரா­னந்­தத்தில் மூழ்க இத்­தாலி, நெதர்­லாந்து போன்ற நாடுகள் பேர­திர்ச்­சி­யையும் எதிர்­கொண்ட நிலையில் ரஷ்­யாவின் தலை­நகர் மொஸ்­கோவில் பீபா உலகக் கிண்ண இறுதிச் சுற்­றுக்­கான குலுக்கல் நடத்­தப்­பட்­டது.

உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட இறுதிச் சுற்றில் நேரடித் தகு­தியைப் பெற்ற போட்­டி­களை முன்­னின்று நடத்தும் வர­வேற்பு நாடான ரஷ்­யா­வுடன் நடப்பு உலக சம்­பியன் ஜேர்­மனி, ஐந்து தட­வைகள் உலக சம்­பி­ய­னான பிரேஸில், போர்த்­துகல், முன்னாள் உலக சம்­பியன் ஆர்­ஜன்­டீனா, பெல்­ஜியம், போலந்து, முன்னாள் உலக சம்­பியன் பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரல்­ப­டுத்தல் அடிப்­படையில் முதல் எட்டு நாடு­க­ளாக ஒரு சாடியில் இடம்­பெ­று­கின்­றன.

மற்­றைய 24 நாடுகள் நிரல் படுத்தல் அடிப்­ப­டையில் தலா 8 நாடுகள் வீதம் மேலும் 3 சாடி­களில் அவற்றின் பெற­யர்கள் போடப்­பட்டு மொஸ்­கோவின் க்ரெம்ளின் மாளி­கை­யில்­ கு­லுக்கல் நடத்­தப்­பட்­டது.

இக் குலுக்­க­லின்­போது எட்டு குழுக்­க­ளிலும் கிட்­டத்­தட்ட சம­பலம் கொண்ட அணிகள் இடம்­பெ­று­வதை அவ­தா­னிக்க முடிந்­தது. (இங்­குள்ள படத்தில் குழுக்­களில் இடம்­பெ­றும் நாடுகள் குறிக்­கப்­பட்­டுள்­ளன). ஆனால் கால்­பந்­தாட்­டத்தில் எதுவும் நிக­ழலாம் என்ற நிலை இருப்­பதால் அணி­களின் பலத்தைக் கொண்டு போட்டி முடி­வு­களை எடை­போட முடி­யாது என கால்­பந்­தாட்ட விமர்­ச­கர்கள் தெரி­வித்­தனர்.

இதற்கு இத்­தாலி, நெதர்­லாந்து போன்ற உலகப் பிர­சித்­த­ி பெற்ற நாடுகள் தகு­தி­பெறத் தவ­றி­யதை அவர்கள் உதா­ரணம் காட்­டு­கின்­றனர். எவ்­வா­றா­யினும் பி, சி, டி, எவ், எச் ஆகிய குழுக்­க­ளுக்­கான போட்­டிகள் மிகுந்த பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

குழு பியில் ஸ்பெயினும் குழு டியில் ஆர்­ஜென்­டி­னாவும் லீக் சுற்று முடிவில் முத­லி­டத்தைப் பெற்றால் இரு அணி­களும் கால் இறு­தியில் நேருக்கு நேர் மோத வேண்டி வரும். ஆனால் ஸ்பெயின் இடம் பெற்­றுள்ள பிரிவில் வலு­வான போர்த்­துக்கல் அணியும் இடம் பிடித்­துள்­ளது.

குழு எவ்வில் இடம்­பெறும் நடப்பு சம்­பி­ய­னான ஜெர்­மனி கால் இறு­திக்கு முன்­ன­ரான 16 அணிகள் சுற்றில் பிரேஸில் அணியை சந்­திக்­கக்­கூ­டிய நிலைமை ஏற்­பட வாய்ப்­புள்­ளது. பிரேஸில் தனது குழுவில் 2ஆவது இடத்தைப் பிடித்தால் மட்­டுமே இந் நிலை ஏற்­படும்.

2018 உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட இறுதிச் சுற்றின் ஆரம்பப் போட்­டியில் வர­வேற்பு நாடான ரஷ்யா, ஜூன் 14ஆம் திகதி சவூதி அரேபியாவை எதிர்த்தாடவுள்ளது. ரஷ்யாவில் 11 நகரங்களில் உள்ள 12 விளையாட்டரங்குகளில் 64 போட்டிகள் நடைபெறவுள்ளன. இறுதிப் போட்டி 2018 ஜூலை 15ஆம் திகதி நடைபெறும்.

(Visited 41 times, 1 visits today)

Post Author: metro