விளம்­பர படங்­களில் நடிக்க மாட்டேன் – சிவ­கார்த்­தி­கேயன்

இனி விளம்­பர படங்­களில் நடிக்க மாட்டேன் என ‘வேலைக்­காரன்’ படத்தின் இசை வெளி­யீட்டு விழாவில் நடிகர் சிவ­கார்த்­தி­கேயன் தெரி­வித்துள்ளார்.

மோகன் ராஜா இயக்­கத்தில், சிவ­கார்த்­தி­கேயன், நயன்­தாரா, பகத் பாசில் முதன்மை ரோலில் நடித்­துள்ள படம் ‘வேலைக்­காரன்’. அனிரூத் இசை­ய­மைக்க, 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் சார்பில் ராஜா தயா­ரித்­தி­ருக்­கிறார். இப்­ப­டத்தின் இசை வெளி­யீட்டு விழா, சென்­னையில் நடைபெற்றது.

இதில் சிவ­கார்த்­தி­கேயன் பேசி­ய­தா­வது, ‘தனி ஒருவன்’ படத்­திற்கு பிறகு மோகன் ராஜா­வுடன் படம் பண்ண வேண்டும் என்று நானே அவ­ரிடம் கேட்டேன். அவரை ரீ-மேக் பட இயக்­குநர் என கிண்டல் செய்­தார்கள். ரீ-மேக் படம் பண்­ணு­வது சாதா­ரண விஷயம் இல்லை. எனக்கும் கூட பத்து ரீ-மேக் பட வாய்ப்­புகள் வந்­தன, ரொம்ப கஷ்டம் என்­பதால் அதை மறுத்து விட்டேன்.

ரஜினி சார் பட தலைப்பில் நடிக்க யோசித்தேன். ஆனால், படத்­திற்கு பொருத்­த­மான தலைப்பு என படம் பார்க்­கும்­போது நீங்கள் உணர்­வீர்கள். பகத் பாசில் ஒரு சர்­வ­தேச நடிகர், அவர் இந்­தப்­ ப­டத்தில் நடிப்­பது எங்­க­ளுக்கு கிடைத்த பெருமை.

‘எதிர்­நீச்சல்’ படத்­துக்கு சம்­பளம் கூட வாங்­காமல் நடித்து கொடுத்தார் நயன்­தாரா. அதன்­பி­றகு ‘வேலைக்­காரன்’ ஷூட்­டிங்கில் தான் அவரை சந்­தித்தேன். அவரின் தன்­னம்­பிக்கை தான் அவ­ருக்­கென தனி மார்க்­கெட்டை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது.
அனிருத் இல்­லைன்னா சிவ­கார்த்­தி­கேயன் இல்­லைனு டுவிட்­டரில் பலரும் சொல்­வார்கள்.

அது உண்மை, அதை கேட்­கும்­போது மகிழ்ச்­சி­யாக இருக்­கி­றது. ரசி­கர்கள் எனக்கு நிறைய கொடுத்­தி­ருக்­கி­றீங்க, அதை எப்­படி திருப்பி கொடுப்­பேன்னு தெரி­யல. ரசி­கர்­க­ளுக்கு நான் கொடுக்கும் பரிசு இந்த ‘வேலைக்­காரன்.’  நான் விளம்­ப­ரங்­களில் நடிப்­ப­தில்லை, இந்த படத்தில் நடித்த பிறகு விளம்­ப­ரங்­களில் இனி நடிக்­கவே மாட்டேன் என முடி­வெ­டுத்­தி­ருக்­கிறேன்.

9 படம் பொழு­து­போக்­குக்கு நடித்தால், ஒரு படம் மக்­க­ளுக்கு அறிவை புகட்டும் படமாக இருக்கும். முழுக்க கதையை நம்பி மட்டுமே எடுக்கப்பட்ட படம் ‘வேலைக்காரன்’. இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.

(Visited 47 times, 1 visits today)

Post Author: metro