பாம் எண்­ணெ­யுடன் தேங்காய் எண்ணெய் கலப்­படம் செய்யும் தொழிற்­சாலை கலே­வெ­லவில் சுற்றி வளைப்பு: இருவர் கைது

(ரெ.கிறிஷ்­ணகாந்)

கலே­வெல பிர­தே­சத்தில் பாம் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் என்­ப­வற்றை ஒன்­றாக கலப்­படம் செய்யும் தொழிற்­சாலை ஒன்றை முற்­று­கை­யிட்­ட­துடன் சந்­தேக நபர்கள் இரு­வரை தம்­புள்ளை பொலிஸ் அதி­ர­டிப்­ப­டை­யினர் கைது செய்­துள்­ள­தாக தெரி­வித்­துள்­ளனர்.

நேற்று முன்­தினம் மேற்­கொள்­ளப்­பட்ட இச்­சுற்­றி­வ­ளைப்பின் போது குறித்த தொழிற்­சா­லை­யி­லி­ருந்து, கலப்­படம் செய்­யப்­பட்ட சுமார் 25,000 லீற்றர் தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் என்­ப­வற்றை கைப்­பற்­றி­யுள்­ள­தாக பொலிஸ் அதி­ர­டிப்­ப­டை­யினர் தெரி­விக்­கின்­றனர்.

அத்­துடன், இத்­தொ­ழிற்­சா­லைக்கு அருகில் காணப்­பட்ட லொறி ஒன்­றையும், கெப் ஒன்­றையும் பொலிஸ் அதி­ர­டிப்­ப­டை­யினர் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

 

வெளி­மா­வட்­டங்­க­ளி­லி­ருந்து தேங்காய் கொப்­ப­ரை­களை சேக­ரித்து வந்து இயந்­தி­ரங்கள் மூலம் தேங்காய் எண்ணெய் தயா­ரித்து அதி­சூட்­சு­ம­மான முறையில் பாம் எண்­ணெய்யை கலந்து தொழிற்­சா­லை­யினுள் கலப்­பட தேங்காய் எண்ணை தயா­ரிப்பு செயற்­பாட்­டினை சந்­தே­க­ந­பர்­க­ளான தொழிற்­சாலை உரி­மை­யா­ளரும் மற்­றைய நப­ரொ­ரு­வரும் மேற்­கொண்டு வந்­துள்­ள­தாக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

சந்­தேக நபர்கள் இரு­வரும் பாம் எண்ணெய் கலக்­கப்­பட்ட தேங்காய் எண்­ணெய்யை கண்­டிக்கு கொண்டு செல்­வ­தற்கு தயா­ராக இருந்த வேளையில் இந்த சுற்­றி­வ­ளைப்பு மேற்­கொள்ளப் பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் தம்புள்ளை பொலிஸ் அதிரடிப்படயினர், கலேவெல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத் துள்ளனர்.

(Visited 43 times, 1 visits today)

Post Author: metro