வவு­னி­யா­வி­லி­ருந்து யாழ் நீதி­மன்­றுக்கு அழைத்துச் செல்­வ­தற்கு தயா­ரான போது இருவர் தப்­பி­யோ­டிய நிலையில் பிடி­பட்­டனர்!

(மயூரன்

வவு­னியா சிறைச்­சா­லை­யி­லி­ருந்து யாழ்ப்­பாணம் மேல்­நீ­தி­மன்­றுக்கு அழைத்­து­வ­ரப்­பட்ட மூன்று சந்­தே­க­ந­பர்­களில் இருவர் சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­களின் பிடி­யி­லி­ருந்து நேற்று அதி­காலை 4 மணி­ய­ளவில் தப்பிச் சென்­றுள்­ளனர்.

கிளி­நொச்சி நீதிவான் நீதி­மன்ற சான்றுப் பொருட்கள் கொண்ட அறையை உடைத்து அங்­கி­ருந்த கஞ்­சாவை திரு­டிய குற்­றச்­சாட்டில் நீதி­மன்ற உத்­த­ரவில் விளக்க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த இரு­வரே இவ்­வாறு தப்பிச் சென்­றனர்.

எனினும் 2 மணி­நேர தேடு­தலின் பின்னர் அவர்கள் இரு­வ­ரையும் சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்கள் மீண்டும் பிடித்­துள்­ளனர்.
நீதி­மன்றப் பாது­காப்­பி­லி­ருந்த சான்றுப் பொரு­ளான ரூபா 27 இலட்சம் பெறு­ம­தி­யான கஞ்சா போதைப் பொருள் கடந்த ஆண்டு திரு­டப்­பட்­டி­ருந்­தது. இந்தச் சம்­பவம் தொடர்பில் மூவர் கிளி­நொச்சிப் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டனர். அவர்­க­ளி­ட­மி­ருந்து சான்­றுப்­பொ­ரு­ளான கஞ்­சாவும் மீட்­கப்­பட்­டது.

இந்த நிலையில், சந்­தேக நபர்கள் மூவ­ருக்கும் எதி­ராக திருட்டுக் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்றில் சட்­டமா அதி­பரால் குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்­டது.

அந்த வழக்கு விசா­ர­ணைக்கு நேற்று திக­தி­யி­டப்­பட்­டி­ருந்­தது. இத­னை­ய­டுத்தே சந்­தே­க­ந­பர்­களை யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்றில் ஆஜர் படுத்த வவு­னியா சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்கள் நேற்று அதி­காலை 4 மணிக்குப் புறப்­படத் தயா­ரான நிலையில் சந்­தே­க­ந­பர்கள் மூவ­ரையும் சிறைச்­சாலை வாக­னத்தில் ஏற்ற முற்­பட்ட போதே இருவர் தப்பிச் சென்­றனர்.

இத­னை­ய­டுத்து 2 மணி­நேர தேடு­தலின் பின்னர் வவு­னியா நகர்ப்­ப­கு­தியில் மறைந்­தி­ருந்த போது அவர்கள் இரு­வரும் மீண்டும் பிடிக்­கப்­பட்­டனர் என சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்கள் தெரி­வித்­தனர். பின்னர் இவர்கள் ஆயுதம் தாங்­கிய சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­களின் பாது­காப்­புடன் அழைத்துச் செல்­லப்­பட்டு மேல் நீதி­மன்றில் முற்­ப­டுத்­தப்­பட்­டனர்.

இந்த நிலையில் மூவருக்கும் எதிரான தண்டனைத் தீர்ப்பு வரும் ஜனவரி 7ஆம் திகதி வழங்கப்படும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அறிவித்தார். அதுவரை சந்தேகநபர்களின் விளக்கமறியல் மன்றினால் நீடிக்கப்பட்டது.

(Visited 26 times, 1 visits today)

Post Author: metro