இலங்­கையின் ஒருநாள் கிரிக்கெட் குழாத்தில் மீண்டும் குசல் பெரேரா, அசேல குண­ரட்ன

(நெவில் அன்­தனி)

இந்­தி­யா­வுக்கு எதி­ராக இம் மாதம் 10ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள 3 போட்­டி­களைக் கொண்ட சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொட­ருக்­கான இலங்கை குழாத்தில் அதி­ரடி ஆரம்ப வீரர் குசல் ஜனித் பெரேரா, அசேல குண­ரட்ன ஆகியோர் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளனர். இந்­தி­யா­வுக்கு எதி­ராக கடந்த ஜூன் மாதம் நடை­பெற்ற சர்­வ­தேச ஒருநாள் போட்­டிக்குப் பின்னர் உபாதை கார­ண­மாக இலங்கை அணியில் குசல் பெரேரா இடம்­பெ­ற­வில்லை.

ஸிம்­பாப்­வேக்கு எதி­ராக கடந்த ஜூலை மாதம் நடை­பெற்ற சர்­வ­தேச ஒருநாள் தொட­ருக்கு பின்னர் கையில் காயம் ஏற்­பட்­டதன் கார­ண­மாக அசே­லவும் சர்­வ­தேச அரங்கில் விளை­யா­டாமல் இருந்தார்.

இதே­வேளை, விளை­யாட்­டுத்­துறை அமைச்­சரால் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டா­ததன் கார­ண­மாக இந்­தி­யா­வுக்கு திங்­க­ளன்று புறப்­ப­ட­வி­ருந்த 9 வீரர்கள் அமைச்­சரின் உத்­த­ர­வின்­பேரில் மீள­ழைக்­கப்­பட்­டி­ருந்­தனர். இந் நிலையில் பதினாறாவது வீர­ராக குசல் ஜனித் பெரேரா இணைத்­துக்­கொள்­ளப்­பட்ட 16 வீரர்­களைக் கொண்ட குழாத்­திற்­கான அங்­கீ­கா­ரத்தை விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் நேற்று வழங்­கினார்.

இந்­தி­யா­வுக்கு எதி­ரான டெஸ்ட் தொடரில் இலங்கை குழாத்தில் ஏற்­க­னவே இடம்­பெறும் ஏஞ்­சலோ மெத்யூஸ், நிரோஷன் திக்­வெல்ல, தனஞ்­செய டி சில்வா, சுரங்க லக்மால், லஹிரு திரி­மான்ன, சதீர சம­ர­விக்­ரம ஆகிய ஆறு வீரர்கள் திசர பெரேரா தலை­மை­யி­லான சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் குழாத்­திலும் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர். இந்த அறு­வரைத் தவிர ஏனைய பத்து வீரர்கள் இந்­தியா நோக்கி இன்று இரவு புறப்­ப­ட­வுள்­ளனர்.

இலங்­கையின் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் குழாம்

திசர பெரேரா (அணித் தலைவர்), உப்புல் தரங்க, தனுஷ்க குண­தி­லக்க, லஹிரு திரி­மான்ன, ஏஞ்­சலோ மெத்யூஸ், அசேல குண­ரட்ன, நிரோஷன் திக்­வெல்ல, சத்­து­ரங்க டி சில்வா, அக்கில தனஞ்செய, சுரங்க லக்மால், நுவன் ப்ரதீப், சதீர சமரவிக்ரம, தனஞ்செய டி சில்பா, துஷ்மன்த சமீர, சச்சித் பத்திரண, குசல் ஜனித் பெரேரா.

(Visited 59 times, 1 visits today)

Post Author: metro