2013 : புறக்­கோட்டை தீயினால் நூற்­றுக்கும் அதி­க­மான கடைகள் சேதம்

வரலாற்றில் இன்று…

டிசம்பர் 06

 

1240 : யுக்­ரைனின் கீவ் நகரம் மொங்­கோ­லி­ய­ரிடம் வீழ்ந்­தது.

1768 : பிரிட்­டா­னிக்கா கலைக்க­ளஞ்­சி­யத்தின் முதற் பதிப்பு வெளி­யி­டப்­பட்­டது.

1790 : ஐக்­கிய அமெ­ரிக்க நாடா­ளு­மன்றம் நியூயோர்க் நகரில் இருந்து பில­டெல்­பி­யா­வுக்கு இடம்
­பெ­யர்ந்­தது.

1865 : ஐக்­கிய அமெ­ரிக்­காவில் அடிமை முறை தடை செய்­யப்­பட்­டது.

1897 : உலகில் முதற்­த­ட­வை­யாக வாடகை வாகனம் லண்­டனில் சேவைக்கு விடப்­பட்­டது.

1907 : அமெ­ரிக்­காவின் மேற்கு வேர்­ஜீ­னி­யாவில் மொனொங்கா என்ற இடத்தில் நிலக்­கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்­பெற்ற வெடி­
வி­பத்தில் 362 தொழி­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டனர்.

1917 : ரஷ்­யா­விடம் இருந்து சுதந்­தி­ர­ம­டை­வ­தாக பின்­லாந்து அறி­வித்­தது.

1917 : கன­டாவின் நோவா ஸ்கோசி­யாவில் ஹலிஃபாக்ஸ் துறை­மு­கத்தில் ஆயுதக் களஞ்­சியக் கப்பல் ஒன்று வேறொரு கப்­ப­லுடன் மோதி வெடித்­ததில் 1900 பேர் கொல்­லப்­பட்­ட­துடன் நக­ரத்தின் பெரும் பகுதி அழிந்­தது.

1921 : இங்­கி­லாந்­துக்கும் அயர்­லாந்­துக்கும் இடையில் நட்­பு­றவு ஒப்­பந்தம் கையெ­ழுத்­தா­கி­யது.

1922 : ஐரிஸ் சுதந்­திர நாடு உரு­வா­னது.

1941 : இரண்டாம் உலகப் போரில் பின்­லாந்­துக்கு எதி­ராக ஐக்­கிய இராச்­சியம் போர்ப் பிர­க­டனம் செய்­தது.

1957 : வாங்கார்ட் ரொக்கெட் ஏவப்­ப­டு­கையில், வெடித்துச் சித­றி­யதால் செய்­ம­தி­யொன்றை விண்
­வெ­ளிக்கு ஏவும் அமெ­ரிக்­காவின் முதல் முயற்சி தோல்­விய­டைந்­தது.

1967 : அட்­ரியன் கன்ட்­ரோவிட்ஸ் என்­ப­வ­ருக்கு இத­ய­மாற்று சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டது. அமெ­ரிக்­காவில் மேற்­கொள்­ளப்­பட்ட முத­லா­வது மனித இத­ய­மாற்று சத்­தி­ர­சி­கிச்சை இது.

1971 : பங்­க­ளா­தேஷை இந்­தியா அங்­கீ­க­ரித்­ததைத் தொடர்ந்து இந்­தி­யா­வு­ட­னான அனைத்து ராஜ­தந்­திர உற­வு­க­ளையும் பாகிஸ்தான் துண்­டித்­தது.

1977 : பொப்­பு­தட்ஸ்­வானா பிராந்­தி­யத்­துக்கு தென் ஆபி­ரிக்கா சுதந்­திரம் அளித்­தாலும் எந்த நாடும் அதனை அங்­கீ­க­ரிக்­க­வில்லை.

1992 : இந்­தி­யாவின் அயோத்தி நகரில் முக­லாய மன்னர் பாப­ரினால் 16 ஆம் நூற்­றாண்டில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட பாபர் மசூதி, இந்­துத்வா அமைப்­பி­னரால் இடித்து அழிக்­கப்­பட்­டது.

1997 : ரஷ்­யாவின் சைபீ­ரிய பிராந்­தி­யத்தில் ரஷ்ய சரக்கு விமானம் ஒன்று குடி­யி­ருப்புத் தொடர் ஒன்றில் மோதி­யதில் 67 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2005 : சீனாவின் டொங்சூ என்ற இடத்தில் இடம்­பெற்ற ஆர்ப்­பாட்­டத்தின் போது பல கிராம மக்கள் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டனர்.
2005: ஈரா­னிய விமா­னப்­படை விமா­ன­மொன்று தெஹ்ரான் அருகே விபத்­துக்­குள்­ளா­னதால் 84 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2006 : செவ்வாய்க் கோளில் இருந்து மார்ஸ் குளோபல் சேர்வயர் அனுப்பிய படங்களின் மூலம், அங்கு நீர் திரவ நிலையில் இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக நாசா அறிவித்தது.

2013 : கொழும்பு புறக்கோட்டை போதிராஜா மாவத்தையில் ஏற்பட்ட தீயினால் நூற்றுக்கும் அதிகமான கடைகள் தீக்கிரையாகின.

(Visited 20 times, 1 visits today)

Post Author: metro